ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பல்வேறு நிறுவனங்களும் போட்டி போடுவது தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
மேலும் ஜம்மு காஷ்மீரில் இருந்த நில உரிமையாளர்கள் சட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்தத்தின் அடிப்படையில் காஷ்மீரில் எந்த மாநிலத்தவரை சேர்ந்தவரும் நிலம், வீடு ஆகியவற்றை வாங்கலாம் மற்றும் தொழில்களிலும் முதலீடு செய்யலாம்.

இதனை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் காஷ்மீரில் தொழில்களை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஜூலை 3ஆம் தேதி நிலவரப்படி காஷ்மீரில் தொழில் தொடங்குவதற்கு சுமார் 6,909 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொழில் தொடங்க 5,007 விண்ணப்பங்களும் ஜம்மு பகுதியில் தொழில் தொடங்க 1902 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறு குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.
இந்த நிறுவனங்களுக்காக 4935.61 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. ஜம்மு பகுதியில் பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன இதற்காக 3671.98 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
குறிப்பாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனம், வெல்ஸ் பென் குரூப், துபாயின் ஈனார் குரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் இங்கே தொழில் தொடங்குவதில் மிக தீவிரமாக இருக்கின்றன. இவற்றுக்கு ஏற்கனவே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய தொழில்கள் மூலம் ஜம்மு காஷ்மீரில் 1.23 லட்சம் கோடி வரை முதலீடுகள் கிடைக்கும் என்றும் சுமார் 4.60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜஸ் நிறுவனம் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் அலுமினியம் கேன்களை தயாரிக்கும் ஆலையை நிறுவ உள்ளது. குளிர் பானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான காந்தாரி ஜம்மு காஷ்மீரில் 1100 கோடி ரூபாயில் புதிய ஆலையை தொடங்கியுள்ளது இந்த நிறுவனத்துக்காக 36 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துபாயின் ஈமார் குழுமம் சார்பில் ஸ்ரீ நகரில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது.ப்ளூம்டெக்ஸ் என்ற நிறுவனம் ஆடை தயாரிப்பு ஆலையை 300 கோடி மதிப்பில் நிறுவ உள்ளது. கத்துவா பகுதியில் வெல்ஸ்பன் நிறுவனமும், ஹல்திராம்ஸ் நிறுவனமும் ஆலைகளை நிறுவ உள்ளன.
மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு சார்பில் புதிய கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள் காஷ்மீரில் 2000 ஸ்டார்ட் நிறுவனங்களை தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
story written by: Devika


Click it and Unblock the Notifications