உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள், தங்கள் நிறுவன பணிகளில் கணிசமான வேலைகளை மனிதர்களிடம் இருந்து பறித்து ஏஐ வசம் ஒப்படைத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் அடிப்படையிலான மென்பொருள் நிறுவனமான சேல்ஸ் ஃபோர்ஸ் தங்கள் நிறுவனத்தில் 50 சதவீத பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்வதாக தெரிவித்து இருக்கிறது.
சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மார்க் பெனி ஹாஃப் ப்ளூம்பெர்க் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார் . அந்த பேட்டியில் சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனம் தன்னுடைய கோடிங் பணிகளை 30 லிருந்து 50 சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நிறைவேற்றி வருகிறது என கூறி இருக்கிறார். மனிதர்களால் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்னும் திறம்பட செய்யக்கூடிய காலம் வரப்போகிறது ,அதனை மனிதர்களாகிய நாம் காண போகிறோம் என தெரிவித்திருக்கும் அவர் அதற்கேற்றபடி மனிதர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

அண்மையில் தான் சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் சுமார் 1000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. ஏஐ தொழில்நுட்பம் காரணமாக மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் சேல்ஸ் ஃபோர்ஸ் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, ஏஐ மூலம் வேலைகளை செய்வதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஏஐ கருவிகள் கோடிங் பணிகளை 93% துல்லியமாக மேற்கொள்கின்றன என தெரிவித்திருக்கும் பெனி ஹாஃப் இதனை 100% என்ற துல்லியத்திற்கு எட்டுவது தற்போது சாத்தியமில்லை எனக் கூறுகிறார்.
அண்மையில் தான் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தங்கள் நிறுவனத்தின் 30 சதவீத கோடின் பணிகளை ஏஐ மூலம் நிறைவேற்றிக் கொள்வதாக கூறி இருந்தார். இது 2024 ஆம் ஆண்டு 25 சதவீதமாக இருந்து தற்போது 30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் தங்கள் நிறுவனத்தில் 30 சதவீத கோடிங் பணிகளை செயற்கை நுண்ணறிவு மூலமே உருவாகுகிறோம் என்றும் குறிப்பிட்ட சில ப்ராஜெக்ட்களுக்கு முழுமையான கோடிங் பணிகளை ஏஐ மூலம் நிறைவேற்றி இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார் .
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க், மிட் லெவல் பொறியாளரின் வேலையை துல்லியமாக ஏஐ கருவிகள் செய்து வருகின்றன அடுத்த 12 மாதங்களில் கோடிங் துறையில் பெரிய மாற்றங்களை காணலாம் என கூறியிருந்தார் . அண்மையில் கூட ஸ்பாட்டிஃபை மற்றும் டுயோலிங்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தன.


Click it and Unblock the Notifications