இந்தியாவில் இருந்து கடந்த 5 வருடத்தில் சுமார் 6 லட்சம் பேர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.
அப்படிக் குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள இந்திய மக்களில் சுமார் 40 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தாக ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா வேண்டாம்..?!
வர்த்தகம், சிறப்பான வாழ்க்கைத் தரம், கல்வி, பிள்ளைகளின் எதிர்காலம், குறைவான வரி, கொண்டாட்டம் எனப் பல காரணத்திற்காக இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளுக்குக் குடியுரிமை பெற்று வருகின்றனர்.
தனிநபர் பணக்காரர்கள்
மேலும் இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெறுவது பெரும்பாலும் HNI எனப்படும் தனிநபர் பணக்காரர்கள் தான். மேலும் இந்தியாவில் இருந்து தற்போது அதிகமானோர் போர்ச்சுகல், மால்டா அல்லது சைப்ரஸ் ஆகிய நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் கோல்டன் விசாவை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
30 நாடுகள்
உலகில் சுமார் 30 நாடுகளில் முதலீட்டு அடிப்படையில் கோல்டன் விசா அளிக்கப்படுகிறது. இத்தகைய விசா அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் உள்ளது. அமெரிக்காவில் விரைவாகக் குடியுரிமை வேண்டும் என விரும்புவோர் EB-5 விசா முறையைத் தேர்வு செய்கிறார்கள்.
6 லட்சம் பேர்
கடந்த 5 வருடத்தில் இந்திய குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள 6 லட்சம் பேருக்கும் இந்திய பாஸ்போர்ட்-ஐ அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். அதாவது இந்த 6 லட்சம் பேருக்கும் இரட்டை குடியுரிமை கிடையாது. ஆனால் இவர்களால் ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா கார்ட்-ஐ பெற்று இந்தியாவில் தங்கவும், வேலை பார்க்கவும், வர்த்தகம் செய்யவும் முடியும்.
தொடர் அதிகரிப்பு
இப்படி இந்தியாவில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 2017 முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமாக 2019ஆம் ஆண்டில் சுமார் 1,44,017 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட அரசிடம் கோரிக்கை வைத்தனர். 2020ல் இதன் எண்ணிக்கை 85,248 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications