சென்னை மிக அருமையான இடம். நான் அதை பிரம்மாண்டமாக கூறவில்லை. இங்குள்ள மாறுபட்ட கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இருந்தாலும் அனைவரும் வாழக்கூடிய ஒரு இடம்.
சென்னையில் வெறும் 5 ரூபாய்க்கும் இட்லி கிடைக்கும். அதே உணவை 500 ரூபாய்க்கும் சாப்பிட முடியும். அது தான் சென்னை. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள்.
இங்கு மிக சாதாரணமாக பார்க்கப்படும் விஷயங்கள் கூட, அண்டை மாநிலங்களில் பல நூறு ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். அப்படி கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றித் தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
ரூ.70 - 80-க்கு ருசியான கடல் உணவு
சென்னையை பொறுத்தமட்டில் தெருவோர தள்ளுவண்டி கடைகளில் ருசியான கடல் உணவுகள் இன்றும் 70 - 80 ரூபாய்க்கு கிடைக்கிறது. நாட்டின் வேறு எந்த பகுதிகளிலும் இந்த அளவுக்கு விலை குறைவான, ருசியான உணவு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். அந்தளவுக்கு மலிவானது. இன்று பணவீக்கமானது இந்தளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில் கூட, குறைவான விலையில் உணவினை பெற முடியும்.
எளிமையானவர்கள்
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இன்னும் கையால் உணவுகளை சாப்பிடும் பழக்கம் இருந்து வருகின்றது. என்ன தான் குழம்பு, ரசம், சட்னி, பிரியாணி என பல வகையான உணவுகளை சாப்பிட்டாலும், ஸ்பூனுக்கு பதிலாக கைகளையே பயன்படுத்துகிறார்கள். அது நம்மூர் கையேந்தி பவனாக இருந்தாலும் சரி, 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல்களாக இருந்தாலும் சரி. இது நம்மவர்களின் எளிமையை காட்டுகின்றது.
ஆடைகளுக்கான செலவு
சென்னையின் வானிலை என்னவாக இருந்தாலும் மழை, வெள்ளம் எப்படியிருந்தாலும், தலை நகரை போல அல்லாமல், சுத்தமான காற்று என பலவும் உள்ளது. அடுத்ததாக மக்கள் அணிந்து செல்லும் எளிமையான ஆடைகள். அது பார்ப்பதற்கு மட்டும் அல்ல, அதன் விலையும் அப்படித் தான். உண்மையில் ஒரு சாதாரண லுங்கியின் விலை தமிழகத்தில் 100 - 200 ரூபாய்.
அதிகாலை வணிகங்கள்
அதிகாலையில் உங்களுக்கு வேண்டுமான அனைத்தும் வீடு தேடி வரும் நடமாடும் சிறு வியாபாரிகள், வீட்டிலேயே உற்பத்தி செய்த பொருட்கள், என அதிகாலையிலேயே வணிகம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. மக்கள் 1000 - 2000 ரூபாய் என செலவு செய்து சினிமா தியேட்டர்களில் கொண்டாடுவதில்லை. இப்படி ஏராளமான சின்ன சின்ன விஷயங்கள் கூட தமிழகத்தினை ஆச்சரியப்பட வைக்கின்றன.
வந்தாரை வாழவைக்கும் சென்னை
இது போன்று இன்னும் பல விஷயங்களை பகிர முடியும். ஓலைக் குடிசையில் இருந்தாலும் சரி, மாடி வீட்டு அண்ணாச்சியானாலும் சரி, இங்கு வாழ முடியும். இதே மற்ற மாநிலங்களில் இந்த மாதிரியான சின்ன விஷயங்கள் கூட மிக அதிக விலை. அதிக செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் தானோ என்னவோ? வந்தாரை வாழவைக்கும் சென்னையை அனைவருக்கும் பிடிக்கிறது. மொத்தத்தில் பொருளாதார ரீதியாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போதும் மக்கள் விரும்பி வாழ உகந்த இடங்களில் ஒன்று சென்னை.


Click it and Unblock the Notifications