சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை நோக்கி மாநில அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கை அடைய உற்பத்தித் துறையின் வளர்ச்சி மிகவும் முக்கியம்.
இந்தக் கண்ணோட்டத்தில் , தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் வகையில் சென்னை மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளில் புதிய தொழில்துறை பூங்கா உருவாக்கம் பணிகளில் சிப்காட், டிட்கோ, எல்காட் உட்பட அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்த வரிசையில் Mapletree என்னும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உலகளாவிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி, முதலீடு, மூலதனம் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனம், தமிழ்நாட்டில் 3 தொழில்துறை-லாகிஸ்டிக் பூங்காக்களை ஓரே நேரத்தில் அமைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Mapletree சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024ல் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கும் தொழில்துறை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் . இந்த திட்டம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.
இந்த நிலையில் தற்போது Mapletree நிறுவனம் கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் ஆகிய 3 தொழிற்துறை பகுதிகளில் இண்டஸ்ட்ரீயல் பார்க் அமைப்பதாகச் சென்னை அப்டேட்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சமீரா வேர்ஹவுஸ்டர் நிறுவனம், செங்கல்பட்டில் 137 ஏக்கர் நிலத்தில் சுமார் 3 மில்லியன் சதுர அடி கிடங்கு பகுதியை அணைக்க நிலத்தை வாங்கியுள்ளது.
சமீரா வேர்ஹவுஸ்டர் சமீபத்தில் தனது புதிய 2.6 லட்சம் சதுர அடி அளவிலான தொழிற்சாலை பகுதியின் கட்டுமானத்திற்கான பூமி பூஜையை நடத்தியது. முதல் கட்டமாக இந்நிறுவனம் 1.01 லட்சம் சதுர அடி பரப்பளவிலான தொழிற்சாலை வசதிகளை கட்டமைக்க உள்ளது. இது பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள எனத்தூரில் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ல் ஆறு புதிய தொழில்துறை பூங்காக்களை அமைக்கும் திட்டத்திற்காக சீப்ரோஸ், அசென்டாஸ், ஈஎஸ்ஆர், மேபிள் டிரீ, பிரகதி வேர்ஹவுசிங் மற்றும் கிரீன்பேஸ் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாடு அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.4,900 கோடியாகும். இதன் மூலம் 21,300 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்த புதிய தொழில்துறை பூங்காக்கள் மூலம் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications