கூகுளின் அறிவிப்பால் இந்திய நிறுவனத்தின் பங்கு சரிவு.. MapMyIndia-வுக்கு பெரும் இழப்பு..!

இந்தியாவில் டெலிவரி நிறுவனங்கள், வாடகை சேவை நிறுவனங்கள் என பல்வேறு செயலிகளும். நிறுவனங்களும் தங்களுடைய செயல்பாடுகளுக்கு மேப் பயன்படுத்துகின்றன. இதற்கு கூகுள் மேப் பயன்படுத்துவதற்கு நிறுவனங்கள் கூகுளுக்கு மிகப்பெரிய தொகையை செலுத்த வேண்டி இருந்தது. இதனால் இந்தியாவின் தயாரிப்பான சி.ஈ.இன்ஃபோ சிஸ்டம் நிறுவனத்திற்கு சொந்தமான மேப் மை இந்தியாவின் "MappIs " மேப்களை இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் மேப் மை இந்தியா நிறுவனத்தின் பங்கு ஜூலை 18ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் ஒரே நாளில் 10% சரிவடைந்தது. இதற்கு முக்கிய காரணம் கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான்.

அண்மையில் ஓலா நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் மேப்பை பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கிறது, எனவே நாங்கள் எங்களது சொந்த மேப்பை பயன்படுத்தப் போகிறோம் என அறிவித்தது.

கூகுளின் அறிவிப்பால் இந்திய நிறுவனத்தின் பங்கு சரிவு.. MapMyIndia-வுக்கு பெரும் இழப்பு..!

இந்த சூழலில் கூகுள் நிறுவனம் தங்களுடைய கூகுள் மேப்களை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணத்தை பெருமளவில் குறைத்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 70 சதவிகிதம் குறைவான கட்டணத்தில் நிறுவனங்கள் கூகுள் மேப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் காமர்ஸ் என்ற ஓஎன்டிசி அமைப்புடன் இணைந்து பல்வேறு டெவலப்பர்களுடன் செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளது.

கூகுளின் இந்த அறிவிப்பின் காரணமாக மேப் மை இந்தியாவின் மேப் பயன்பாடு குறையும் என முதலீட்டாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு ஒரே நாளில் 10 சதவீதம் சரிவடைந்து. ஜூலை 18ஆம் தேதி 2375 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. லொகேஷன் அடிப்படையிலான சேவைகளை வழங்கும் பல நிறுவனங்களும் , செயற்கை நுண்ணறிவு கருவிகள், அலெக்சா போன்ற கருவிகளும் மேப் மை இந்தியாவின் சேவையை பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு தளங்களிளும் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். 2023-24 ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 20 மில்லியன் சாதனங்களில் தங்களின் வரைபட செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 32 சதவீதம் அதிகமாகும். தற்போதைய நிலையில் சிஇ இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனம் 1,372 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை தன் வசம் கொண்டுள்ளது.

கடந்த மாதம் சர்வதேச பங்குச்சந்தை தரகு நிறுவனமான கோல்ட்மேன் சச்ஸ் மேப் மை இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்ற நிலையில் வைத்திருந்தது. பங்கின் மதிப்பு 2,800 ரூபாய் என்ற அளவிற்கு உயரம் என்றும் கூறுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+