மார்ச் 31ம் தேதி, நடப்பு நிதியாண்டின் கடைசி வேலை நாளான இன்று வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வருமான வரி துறை அலுவலகங்கள் என அனைத்தும் இயங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நிதி ஆண்டு முடிவில் நிதி சிக்கல்களைக் குறைத்து, பணிகளை எளிதாக்குவதற்காக ரிசர்வ் வங்கி, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (IRDAI) மற்றும் வருமான வரித்துறை ஆகியவை மார்ச் 31 ம் தேதியை வேலை நாளாக அறிவித்துள்ளன.

எந்த வங்கிகள் இயங்கும்?: ரிசர்வ் வங்கியின் குறிப்பின்படி, அரசு பரிவர்த்தனைகளை கையாளும் அனைத்து வங்கிகளும் மார்ச் 31ம் தேதி இயங்கும். இந்த முகமை வங்கிகளுக்கு, அரசு துறைகளுடன் தொடர்புடைய நிதி விஷயங்களை நிர்வகிக்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று வங்கிகளில் கிடைக்கும் சேவைகள்: நெஃப்ட் (NEFT) மற்றும் ரி.டி.ஜி.எஸ் (RTGS): ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை (NEFT) மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் (RTGS) முறை மூலம் பரிவர்த்தனைகள் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு வரை தொடரும்.
காசோலைகள்: அரசு கணக்குகளுடன் தொடர்புடைய அனைத்து காசோலைகளையும் தணிக்கைக்கு சமர்ப்பிக்கலாம்.
அரசு அமைப்புடனான பரிவர்த்தனைகள்: மத்திய/மாநில அரசுகளின் சார்பாக வருவாய் வசூல் மற்றும் பணம் செலுத்துதல், மத்திய/மாநில அரசுகளின் ஓய்வூதிய பணம் செலுத்துதல், சிறப்பு டெபாசிட் திட்டம் (எஸ்.டி.எஸ்), பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்), கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரித்தி கணக்கு, ரிசர்வ் வங்கியால் முகமை கமிஷனுக்கு தகுதி என்று குறிப்பிடப்படும் பிற வேலைகள் (எ.கா. நிவாரண பத்திரங்கள் / சேமிப்பு பத்திரங்கள் போன்ற பரிவர்த்தனைகள்)
இயங்கும் வங்கிகள்: இந்த முக்கியமான நாளில், 33 முகமை வங்கிகளை இயங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த பட்டியலில் பொது துறை வங்கிகள் 12, தனியார் துறை வங்கிகள் 20 என மொத்தம் 33 வங்கிகள் உள்ளன.
பொது துறை வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆப் பரோடா (BoB) போன்ற முக்கிய பெயர்களும், தனியார் துறை வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட் மற்றும் ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் போன்ற வங்கிகளும் அடங்கும்.
எல்.ஐ.சி அலுவலகங்கள்: காப்பீடுதாரர்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் இருப்பதற்காக, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (IRDAI) தனது அலுவலகங்களை மார்ச் 30 மற்றும் மார்ச் 31ம் தேதிகளில் திறந்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது, இதேபோல் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) அலுவலகங்களும் இந்த இரண்டு நாட்களிலும் வழக்கமான நேரப்படி இயங்கும்.
வருமான வரித்துறை: இந்த மாத தொடக்கத்தில், வருமான வரித்துறை இந்த நீண்ட வார இறுதி விடுமுறை கடைபிடிக்க மாட்டோம் என்றும், நிலுவையில் உள்ள வரி தொடர்பான பணிகளை முடிப்பதற்கு வசதியாக மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை செயல்படும் என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications