கனடாவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் இன்று, பல மாதங்களாக நிலவி வந்த அரசியல் தடுமாற்றம் மற்றும் குழப்பத்திற்கு மத்தியில் இன்ரு முக்கியமான முடிவை அந்நாட்டு மக்கள் எடுத்துள்ளது. வருடக்கணக்கில் விமர்சனங்களை எதிர்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிதை தொடர்ந்து இன்று தேர்தல் நடத்தப்பட்டு அந்நாட்டு மக்கள் புதிய பிரதமரை தேர்வு செய்துள்ளனர்.
இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, திங்களன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மாதம் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதைத் தொடர்ந்து பதவியேற்ற கார்னி, அரசியல் அனுபவம் இல்லாத நிலையில், தனது பொருளாதார நிபுணத்துவத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்று அதிபர் பதவியை அடைந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துவக்கி வைத்துள்ள வர்த்தகப் போரால் கனடா பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியான தருணத்தில், கார்னியின் பொருளாதார நிபுணத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. யார் இவர்..? இவரின் பின்புலம் என்ன..?
முக்கியமானவை:
- இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, திடீர் தேர்தலில் கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலுக்கு பின்னர் கடந்த மாதம் தற்காலிக அதிபராக பதவியேற்றார்.
- 300 ஆண்டு கால இங்கிலாந்து வங்கி வரலாற்றில் முதல் பிரிட்டிஷ் அல்லாத ஆளுநர் இவர்.
- அரசியல் அனுபவம் இல்லாத போதிலும், லிபரல் கட்சி தலைமைப் போட்டியிலும் தேசிய தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் இவரை தேர்வு செய்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மார்க் கார்னி குடும்பம்: கனடாவின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள ஃபோர்ட் ஸ்மித் என்ற நகரத்தில் பிறந்த கார்னி, ஒரு உயர்நிலைப் பள்ளி முதல்வரின் மகனாக ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பின்னணியில் வளர்ந்தார். அவரது கல்வித் திறன் அவரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு உதவித்தொகையுடன் அழைத்துச் சென்றது, அங்கு அவர் கனடாவின் பாரம்பரிய விளையாட்டான ஐஸ் ஹாக்கியில் கிங் மேக்கராகவும் இருந்துள்ளார். இதன் மூலம் கல்வி மற்றும் விளையாட்டில் அசத்தியுள்ளார் மார்க் கார்னி.
மார்க் கார்னி கல்வி: 1995 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வறிக்கை, உள்நாட்டு போட்டி ஒரு பொருளாதாரத்தை தேசிய அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுமா என்பதை ஆராய்ந்தது வெளியிட்டார். அமெரிக்காவின் கடுமையான வரி கட்டணங்களுக்கு மத்தியில் உள்நாட்டு வர்த்தகத்தை வலுப்படுத்த முயலும் கனடாவிற்கு இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாக இருந்தது. நியூயார்க், லண்டன், டோக்கியோ போன்ற உலகளாவிய முக்கிய நகரங்களில் பணியாற்றியவர்.
மார்க் கார்னி பூர்வீகம்: மார்க் கார்னியின் மூதாதையர்கள் அயர்லாந்தின் கவுண்டி மேயோவைச் சேர்ந்தவர்கள், இதனால் அவருக்கு கனடிய குடியுரிமையுடன் அயர்லாந்து குடியுரிமையும் உள்ளது. 2018 இல், இங்கிலாந்து வங்கியில் பணியாற்றியபோது அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார்.
மார்க் கார்னி குடியுரிமை: இருப்பினும், பிரதமராக தனது புதிய பொறுப்புக்கு முழு அர்ப்பணிப்பைக் காட்டும் வகையில், கனடாவின் பிரதமர் கனடிய குடியுரிமை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் அடிப்படையில், பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியுரிமைகளை கைவிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
மார்க் கார்னி முக்கிய பதவி: 2003 இல் தனியார் துறையில் பணியாற்றுவதை மொத்தமாக கைவிட்டு, கனடா நாட்டின் மத்திய வங்கியான Bank of Canada-வில் துணை ஆளுநராக இணைந்தார் மார்க் கார்னி, பின்னர் அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொருட்டு கனடா அரசின் நிதித்துறையில் மூத்த துணை அமைச்சராக பணியாற்றினார்.
மார்க் கார்னி BOC: 2007 இல் Bank of Canada-வின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், 2008 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின் போது நாட்டை வழிநடத்தினார். வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு அவற்றை குறைவாக வைத்திருக்கும் தனது திட்டத்தை வெளிப்படையாக அறிவித்தார். இந்த நடவடிக்கை, சந்தைகள் சரிவடைந்தபோதும் வணிகங்கள் முதலீடு செய்யத் தொடர உதவியது, பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தை குறைத்தது.
மார்க் கார்னி BOE: இதே அணுகுமுறையை அவர் Bank of England-ன் ஆளுநராக பணியாற்றியபோது பின்பற்றினார், அங்கு அவர் வங்கியை நவீனப்படுத்தி, முன்னாள் ஆளுநர்களை விட ஊடகங்களில் அடிக்கடி தோன்றினார். பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார். Bank of England-ன் ஆளுநராக ஜூலை 2013 முதல் மார்ச் 2020 வரையில் பணியாற்றினார்.
மார்க் கார்னி அரசியல் பயணம்: கடந்த ஒரு தசாப்தமாக லிபரல் கட்சி கார்னியை அரசியலுக்கு அழைக்க முயன்றது. ஜனவரியில் ட்ரூடோவு அந்நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து, நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அமைச்சரவையில் இருந்து விலகியதை அடுத்து, கட்சிக்கு உள்ளேயே மோதல்கள் ஏற்பட்டன. இதனால் ட்ரூடோ பதவி விலகினார்.
ஜஸ்டின் ட்ரூடோ வீழ்ச்சி: ட்ரூடோ, ஃப்ரீலேண்டை இடத்தில் கார்னியை நியமித்து கனடா நாட்டின் நிதி அமைச்சராக நியமிக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், லிபரல் கட்சி தலைமைப் போட்டியில், கார்னி தனது நண்பரான ஃப்ரீலேண்டை எதிர்த்து மார்ச் மாத தொடக்கத்தில் பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி பெற்று மக்களை சந்திக்க தயார் ஆனார்.
பொது தேர்தல் வெற்றி: தற்போது நடந்த பொது தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிப்ரல் கட்சி சுமார் 168 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி பெற 172 இடங்களை எட்ட முடியவில்லை. இதனால் மைனாரிட்டி அரசாக கனடாவை வழிநடத்த உள்ளார் கார்னி. அமெரிக்காவின் கடுமையான வரி கட்டணங்களை எதிர்கொள்ள தாமே சிறந்தவர் என கனடா மக்கள் அவரை தேர்வு செய்துள்ளனர்.
பிரதமராக, கனடாவை அமெரிக்காவின் வர்த்தகப் போரில் இருந்து பாதுகாக்க வேண்டிய பெரும் சவாலை கார்னி எதிர்கொள்கிறார். அவரது தேர்தல் பிரச்சாரத்திலும் இது எதிரொலித்தது. இது அமெரிக்க வரி கட்டணங்களின் பொருளாதார விளைவுகளைப் பற்றி கவலைப்படும் மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதாக விளங்கியது. இதுவே மார்க் கார்னியின் வெற்றிக்கு முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
டிரம்ப்-ன் வரி விதிப்புக்கு மார்க் கார்னி டஃப் கொடுப்பாரா..? இவரது தலைமையில் கனடாவில் காலிஸ்தான் பிரச்சனை முடிவுக்கு வருமா..? உங்கள கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
உள்நாட்டு போட்டி குறித்த அவரது கல்வி, அனுபவம், உலகளாவிய நிதி தொடர்புகள் கனடாவின் உள்நாட்டு வர்த்தக கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்.
More From GoodReturns

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மரணம்..? இஸ்ரேல், டிரம்ப் பகிரங்க அறிவிப்பு..!

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு சதி!!

டிரம்ப் மிரட்டல்.. ஈரான் நாட்டில் பெரிய அலை வரபோகுது.. பரபர அறிவிப்பு..!!

ஈரான் போரால் இந்திய பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி!! நாளைக்கு பெரிய சூறாவளியே இருக்கு!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஜனவரியில் வெனிசுலா, பிப்ரவரியில் ஈரான்: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் டிரம்ப்!! உலக போருக்கான தொடக்கமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications