சர்வதேச முதலீட்டு சந்தையில் மிகவும் பிரபலமான முதலீட்டாளரான Mark Mobius, அதானி குழுமம் குறித்த பிரச்சனையை ஹிண்டன்பர்க் மிகைப்படுத்திக்காட்டி உள்ளது என தெரிவித்துள்ளார். அதானி குழுமம் தனது கனவு FPO திட்டத்தை அறிமுகம் செய்த நேரத்தில் ஹின்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை வெளியிட்டு பெரும் பாதிப்பை அதானி குழும பங்குகளுக்கு ஏற்படுத்தியது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை தொடர்ந்து அதானி குழும பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருவது மட்டும் அல்லாமல் இந்தியாவில் எந்த ஒரு வங்கியும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்க விரும்பவில்லை. இது மட்டும் அல்லாமல் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி தனி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முடிவுகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகவில்லை.

ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட பின்பும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டின் மிகப்பெரிய ஆய்வு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, மற்றும் ஓய்வூதிய அமைப்பான EPFO தொடர்ந்து அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. ஜனவரி 24க்கு பின் அதானி குழுமம் பெற்ற பெரும் முதலீடு என்றால் GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் முதலீடு மட்டுமே.
இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை காரணங்களுக்கு இணங்க அதானி பங்குகளும் ஏற்ற இறக்கத்துடன் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மார்க் மொபியஸ் கருத்து அதானி குழும முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் உயரவும் வாய்ப்புகள் உள்ளது.

மார்க் மொபியஸ் கூறுகையில், என்னுடைய கணிப்பு என்னவென்றால் அதானி குழும பிரச்சனையை ஹிண்டன்பர்க் மிகைப்படுத்தி தனது அறிக்கையில் காட்டியுள்ளது. ஆனால் அதானி பங்குகளை ஷாட்டிங் செய்ய பல காரணங்கள் அவர்களுக்கு இருந்தாலும், இதனால் அவர்களுடைய அறிக்கை முழுவதும் சரியானது என்பது இல்லை என மார்க் மொபியஸ் கூறியுள்ளார்.

மேலும் அதானி குழுமம் அதிகப்படியான கடனில் இருப்பது, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக உள்ளது அனைவருக்கும் ஹிண்டன்பர்க் அறிக்கை வருவதற்கு முன்பே தெரியும் எனவும் மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார். விதிமீறல்கள் இல்லையெனில் வினோத் அதானி நேரடியாக தனது பெயரிலும் சொந்த நிறுவனத்திலும் அதானி பங்குகளை வாங்கியிருக்கலாம், எதற்காக பல ஷெல் கம்பெனிகளை பயன்படுத்தி முறைமுகமாக வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications