பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது குழந்தையை அவர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜுக்கர்பெர்க் அவர்களின் மனைவி பிரிசில்லா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க் வீட்டில் ஒரு புதிய விருந்தாளி இருக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர்.
மெட்டா பில்லியனர் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்
மெட்டாவின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், தானும் மனைவி பிரிசில்லா சானும் மூன்றாவது குழந்தையை எதிர்பார்க்கிறோம் என்று அறிவித்துள்ளார். குடும்ப விஷயங்களை ஜுக்கர்பெர்க் பொதுவாக வெளியிடாத வழக்கம் இருந்தாலும், அவர் அடுத்த ஆண்டு ஒரு குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது குழந்தை
இரண்டு குழந்தைகளின் தந்தையான மார்க் ஜுக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து தனது இரண்டு குழந்தைகளும் அடுத்த ஆண்டு ஒரு அன்பான சகோதரியை பெறுகிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகள்
மார்க் ஜுக்கர்பெர்க்கின் இரண்டு குழந்தைகள், மாக்சிமா சான் ஜுக்கர்பெர்க் மற்றும் ஆகஸ்ட் சான் ஜுக்கர்பெர்க் ஆகியோர்கள் முறையே 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பிறந்தனர். ஜுக்கர்பெர்க் மற்றும் சான் 2003ஆம் ஆண்டில் டேட்டிங் செய்யத் தொடங்கினர். அதாவது ஃபேஸ்புக் நிறுவப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடி 2012ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.
மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு
மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் கணக்கின்படி அவரது நிகர மதிப்பு கிட்டத்தட்ட $52.3 பில்லியன் ஆகும். இந்த ஆண்டின் உலகப் பொருளாதார சரிவு காரணமாக அவரது சொத்து மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 38 வயதான மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியலில் 22 வது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications