பேஸ்புக் நிறுவனரும், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜக்கபர்க் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதற்கு மெட்டா நிறுவனத்தின் வளர்ச்சியும் நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மெட்டா நிறுவனம் எதிர்பார்த்ததை விட சிறந்த வளர்ச்சியை தந்துள்ளதும் காரணமாகும். அதுமட்டுமின்றி மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 23 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான மெட்டாவெர்ஸ் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கி இருப்பதே இந்த நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 582.77 டாலர்கள் என உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக மார்ச் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என உயர்ந்துள்ளது. எனவே ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி மார்க் ஜூக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஜெஃப் பெசோஸை பொறுத்தவரை 205.1 பில்லியன் டாலர்களோடு உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது 206.2 பில்லியன் டாலர்களுடன் மார்க் ஜூக்கர்பெர்க் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நடப்பு ஆண்டில் மட்டும் மார்க்கின் சொத்து மதிப்பு 78 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான சொத்து மதிப்பு மெட்டா நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மூலமாக மட்டுமே வந்துள்ளது .மெட்டா நிறுவனத்தில் மார்க் 13 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அதாவது 345 மில்லியன் பங்குகள் அவருக்கு சொந்தமானதாக இருக்கின்றன.
மெட்டாவர்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிலில் அதிகபட்ச தொகையை முதலீடு செய்தார் மார்க். ஆனால் தொடக்கத்தில் இதன் மீது பெரும்பாலான முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பில் சுமார் 100 மில்லியன் டாலர்கள் குறைந்தன. ஆனால் தன்னுடைய உத்திகளை மாற்றி அமைத்த மார்க் தற்போது மெட்டா ஏஐ செயல்பாட்டை சர்வதேச அளவில் முன்னணி ஏஐ செயலியாக கொண்டு வந்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் பயனாளர்கள் மெட்டா ஏஐ-ஐ பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனால் தற்போது மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயர்ந்து வருகிறது. தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவரது சொத்து மதிப்பு 256.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications