பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா-வின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட காலமாக முதலீடு செய்து வருகிறார். ஹூவாய் பகுதியில் இருக்கும் கவாய் தீவில் 2014 முதல் மார்க் ஜூக்கர்பெர்க் பகுதி பகுதியாகச் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் வாங்கியுள்ள இந்த 1400 ஏக்கர் பகுதியை Ko'olau Ranch எனச் செல்லமாகப் பெயரிட்டு உள்ளனர். இந்த நிலம் தொடர்பாகவும், இப்பகுதி மக்களுக்கும் பல பிரச்சனைகள் இருந்து வரும் வேளையில் தொடர்ந்து இப்பகுதியில் புதிய கட்டுமானத்தை எழுப்பி வருகிறார் மார்க் ஜூக்கர்பெர்க்.

இந்த நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது ஹவாயில் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பில் 1400 ஏக்கர் நிலத்திற்குச் சுற்றுச்சுவர் கட்டவும், ஒரு நிலத்தடி பதுங்கு கட்டமைப்பு (BUNKER), இந்தப் பங்கரில் உணவு மற்றும் எனர்ஜி ஆதாரங்கள் உடனும் கட்டமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
போர், இயற்கை பேரழிவு நேரத்தில் பாதுகாப்பான இடத்தை உருவாக்கிக் கொள்ளவே இத்தகைய பங்கர் பொதுவாக உருவாக்கப்படும். சமீபத்தில் பெரும் பணக்காரர்கள் பெரும் திட்டமிடல் உடன் தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்குமான பங்கர் கட்டி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கக்பெர்க்-ம் doomsday-க்கு தயாராகி வருகிறார்.
Koolau Ranch - இந்தப் பரந்து விரிந்த தனியார் சொத்து ஏற்கனவே பல கட்டமைப்புகள் மார்க் ஜூக்கர்பெர்க் குடும்பத்திற்காகக் கட்டப்பட்டு உள்ள வேளையில், இந்தச் சுற்றுச்சுவர், பங்கர் ஆகியவற்றின் மூலம் உலகின் மிகவும் விலையுயர்ந்த கட்டுமான திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
காவாய் தீவில் 1,400 ஏக்கர் சுற்றுச்சுவர் மற்றும் கட்டுமானம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த தகவல்கள் வெளியிடாமல் கட்டுமான நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் ரகசியத்தைக் காக்கின்றனர்.
இந்த 1400 ஏக்கரில் 12க்கும் அதிகமான கட்டமைப்புகள் இருக்கும் வேளையில் இரண்டு சென்டரல் மேன்ஷன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் கட்டிடத்தில் இருந்து சுரங்கப்பாதை மூலம் செல்லும் வகையில் 5,000 சதுரடி கொண்ட பங்கர் இணைக்கப்பட உள்ளது.
இந்த 1400 ஏக்கர் தனியார் சொத்தில் குறைந்தது 30 படுக்கையறைகள் மற்றும் 30 குளியலறைகள் இருக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட உள்ளது. மேலும் இந்தப் பிரம்மாண்டமான மாளிகைக்குத் தேவையான தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்கள் என அனைத்தும் இதன் வளாகத்திற்குள்ளேயே உருவாக்கும் வகையில் அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications