மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி பிரிஸ்கில்லா சானின் பிரம்மாண்ட சிலையை செய்து தங்கள் வீட்டு தோட்டத்தில் வைத்துள்ளார். இது மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி மீது வைத்துள்ள தீராக்காதலின் சான்று என பலரும் பாராட்டி வருகின்றனர். 40 வயதான மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி, சிலையுடன் நிற்கும் புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற கலைஞர் டேனியல் அர்ஷாம் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர் இவர். பிரிஸ்கில்லா சானின் சிலை அவரது சமீபத்திய படைப்புகளில் ஒன்றான டிஃப்பனி கிரீன் பாட்டினாவைப் போலவாயய் உள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன.

"என் மனைவியின் சிலையின் மூலம் ரோமானிய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வந்தது போல உணர்கிறேன். நன்றி டேனியல் அர்ஷாம், என்று மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராமில் சிற்பத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து கேப்ஷனாக எழுதியுள்ளார்.
மார்க் சக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் ஆகிய இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு மாக்சிமா, ஆகஸ்ட் மற்றும் ஆரேலியா என்ற 3 மகள்கள் உள்ளனர். மார்க் சக்கர்பெர்க் ஹார்வர்டில் இருந்தபோது கல்லூரி விருந்தில் முதன் முதலாக பிரிசில்லா சானை சந்தித்துள்ளார். அதன் பிறகு 2003-ஆம் ஆண்டில் இருந்து இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு பேஸ்புக்கில் ஒரு போஸ்டை மார்க் சக்கர்பெர்க் பதிவேற்றினார். அதில் பிரிசில்லா சான் உடனான தனது முதல் சந்திப்பு குறித்து எழுதி இருந்தார். "நான் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்று நினைத்து என் நண்பர்கள் எனக்காக ஒரு ஃபேர்வெல் பார்ட்டி வைத்தனர். அப்போதுதான் பிரிசில்லா சானை முதன் முதலில் சந்தித்தேன்.
அப்போது அங்கு நான் சில நாட்கள் மட்டுமே இருப்பதாக இருந்தேன். இதனால் விரைவில் வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னேன். பின்னர் கொஞ்ச நாளில் நான் ஃபேஸ்புக்கை ஆரம்பித்தேன். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இப்போது மூன்று அற்புதமான பெண் குழந்தைகள் உள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.
மார்க் சக்கர்பெர்க் தனது மனைவியின் சிலையை வீட்டில் வைத்திருப்பதற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பயனர் எல்லா ஊர்களிலும் தற்போது கணவர்கள் நடுங்கி கொண்டிருப்பார்கள் என்று நகைச்சுவையாக எழுதி இருந்தார்.
இன்னொரு இன்ஸ்டாகிராம் பயணர் காதலை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று என்று எழுதி இருந்தார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications