பேஸ்புக்கின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு பன்முகத் திறன் படைத்த இளைஞர். கற்பூர புத்தி என்பது இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தும். எந்த விஷயத்தையும் உடனடியாக உள்வாங்கி அதில் தனது திறனை வளர்த்துக் கொள்ளும் இயல்புடையவர்.
இதனால் தான் பேஸ்புக்கை அவர் இந்தளவுக்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த செய்ய முடிந்தது. சமூக தளங்கள் வேற லெவலுக்கு வந்து நிற்பதன் காரணகர்த்தா இந்த மார்க் ஜூக்கர்பெர்க் என்று சொன்னாலும் மிகையாகாது.

மார்க் ஜூக்கர்பெர்க் இப்போது ஒரு புதிய திறனைக் கற்றுக் கொண்டுள்ளார், கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சரியான சாக்லெட் பேபி போலத் தோன்றும் அவர் ஜப்பானிய கூர் வாள் ஒன்றை அவரே உருவாக்கியுள்ளார்.
அது ஒன்றும் சாதாரண வாள் அல்ல. ஒரே வீச்சில் எந்தப் பொருளையும் இரண்டு துண்டாக சர்வ சாதாரணமாக வெட்டிப்போடும் அளவுக்கு கூர்மை படைத்தது அந்த விசேஷ வாள். அந்த ஜப்பானியப் பாரம்பரிய வாளுக்குப் பெயர் கடானா, இது வலிமையும் அதிக கூர்மையும் படைத்தது.
ஒரு பக்கம் மட்டுமே கூர்மையானதும் நீண்ட கைப்பிடியையும் கொண்டிருக்கும். இருகைகளாலும் அதை ஏந்தி வீசுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கட்டானா வாளை சாமுராய் வீரர்கள் தங்களது பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவர். இது அவர்களது பெருமைக்குரிய ஒரு சின்னமாகக் கருதப்படுகிறது.
தான் தயாரித்த கடானா வாளை சமூகதளத்தில் மார்க் ஜக்கர்பர்க் பகிரந்துள்ளார்.
ஒரு ஜப்பானிய நிபுணரிடம் இருந்து இந்த வாளைத் தயாரிப்பதற்கு மார்க் ஜூக்கர்பெர்க் கற்றுக் கொண்டுள்ளார். இந்த வாளை அவர் தயாரிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை பல விடியோக்களாக உருவாக்கி சமூத தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வாளை அவர் சுழற்றும் காட்சி விடியோக்களில் இடம் பெற்றுள்ளது.
தனது குருவுடன் சேர்ந்து அந்த வாளை மார்க் ஜூக்கர்பெர்க் தயாரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கடானா வாளை லாவகமாக தயாரிக்கும் காட்சிகளும் உள்ளன. இதுபற்றிய விடியோவில் அவர், எனது கடானா மாஸ்டரான அகிஹிரா கோகாஜியுடன் சேர்ந்து இந்த வாளை தயாரித்தேன். இந்த தருணம் எனக்கு பரவசத்தைத் தந்தது. எனக்கு அந்த வித்தையைக் கற்றுத் தந்ததற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு வெளியானதிலிருந்து 2.7 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இது பற்றி நெட்டிசன்கள் நிறைய கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஜூக்கர்பெர்க் இப்போது பிற தேடல்களில் இறங்கிவிட்டார் போல என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். பால்யகால கனவுகளை இங்கே பார்க்க முடிகிறது என்று ஒருவர் கூறியுள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்கால் இன்னும் என்னதான் செய்ய முடியாது என்று மற்றொருவர் ஆச்சரியப்பட்டுள்ளார்.
நீங்கள் ஒரு நிஞ்சாவாகும் பயணத்தில் இறங்கி விட்டீர்கள். நேருக்கு நேர் பொருதும் கலையை இப்போது கத்திகளுடன் செய்கிறீர்கள் என ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். ஒரு மாவீரனைப் போல அறிவுத் திறனை பெறுகிறீர்கள் என்றொருவர் பாராட்டியுள்ளார். ஆறாவதாக ஒருவர், ஸோ கூல். நீங்கள் பெரிய மாவீரன் தான் என்று வியந்துள்ளார்.
இதனிடையே தனது பிற அலுவல்களுக்கு மத்தியில் மார்க் ஜூக்கர்பெர்க் ஜனவரி மாதத்தில் இந்தத் திறனைப் பெற்றுள்ளார்.
இதுபற்றி மார்க் கூறுகையில், உலகின் மிக உயர்ந்த மாட்டிறைச்சியை உருவாக்குவதற்காக ஒரு பண்ணையில் கால்நடைகளை வளர்த்து வருகிறேன். ஜப்பானின் கவாயில் உள்ள கோலாவ் பண்ணையில் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளேன்.
இந்த கால்நடைகள் மக்காடாமியா மற்றும் பீர் போன்ற உணவுகள் அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. கோலாவ் பண்ணையில் கால்நடைகள் வாயிலாக உலகின் மிக உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள். Wagyu மற்றும் Angus போன்ற மாட்டிறைச்சிகள் சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அந்தக் கால்நடைகள் மக்காடாமியா உணவை சாப்பிட்டு, பீர் குடித்து வளர்கின்றன. அதேபோல் இந்த பண்ணையிலும் உற்பத்தி செய்கின்றேன்.
ஆங்கஸ் என்பது ஸ்காட்டிஷ் இனமான சிறிய கால்நடைகள் ஆகும். இது அமெரிக்காவில் மிகவும் விரும்பப்படும் மாட்டிறைச்சி வகையாகும். வாக்யூ என்பது உலகத் தரமான மாட்டிறைச்சிக்காகவே வளர்க்கப்படும் நான்கு வகையான ஜப்பானிய மாடுகளின் தொகுப்பாகும். இந்த வாக்யூ இறைச்சி மிகவும் விலை அதிகமாகும்.
முழுக்க முழுக்க உள்ளூரில் தயாரிக்க இதைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு பசுவும் ஒவ்வொரு ஆண்டும் 5,000-10,000 பவுண்டுகள் உணவை உண்ணும். அதனால் ஏராளமான ஏக்கர் மக்காடமியா மரங்கள் வளர்க்கப்படுகின்றன என்று ஜூக்கர்பெர்க் மேலும் கூறினார்.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications