பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற உலகின் முன்னணி சமுக வலைத்தளங்களை நிர்வாகம் செய்யும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், சமீபத்தில் ஜோ ரோகன் போட்காஸ்டில் பேசியிருந்தார். இதில் தான் பாகிஸ்தான் நாட்டில் ஜெயிலில் தள்ளப்பட்டு இருக்க கூடிய சம்பவத்தை பகிர்ந்தார்.
பாகிஸ்தானில் தனது நிறுவனம் எதிர்கொள்ளும் சட்ட சவால்கள் குறித்து பேசிய மார்க் ஜூக்கர்பெர்க் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். பாகிஸ்தானில் "blasphemy குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிட்டது" என அவர் தெரவித்தார். Blasphemy என்பது இறைவனையோ அல்லது சமய நபர்கள் அல்லது புனித பொருட்களையோ இகழ்வதோ அல்லது அவமதிப்பதோ ஆகும்.

பாகிஸ்தானின் கடுமையான சட்டங்கள் உள்ளது, இந்த நிலையில் பேஸ்புக்கில் ஒரு நபர் தவறான கன்டென்ட் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து, பேஸ்புக்கிற்கு எதிராகத் வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தான் சட்டங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிராகக் கருதப்படும் செயல்களுக்கு அதிகப்படியான தண்டனையும், அபராதமும் விதிக்கும் என மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கினார்.
முகமது நபியின் தவறான படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டதை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டது என மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார். பேஸ்புக் தளத்தில் இப்புகைப்படத்தை பார்த்த மற்றொரு நபர் இந்தப் படம் தங்கள் கலாச்சாரத்தை அவமதிப்பதாகவும், இறை நிந்தனையாகக் (Blasphemy) கருதி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து பேஸ்புக் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்ட பின்பு, புகைப்படத்தை பதிவு செய்தவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜுக்கர்பெர்க், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், வெவ்வேறு நாடுகளில் உள்ள உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கலாச்சார உணர்வுகளை மதிப்பதற்கும் இடையில் மெட்டா ஒரு சமநிலையை ஏற்படுத்த பெரும் பாடுபடுவதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் சம்பவம் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ மரண தண்டனை வரைக்கும் கொண்டு சென்றது என அவர் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு நான் செல்லாத காரணத்தால் இந்த மரண தண்டனை வழக்கில் இருந்து தப்பித்தேன் என தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 7 ஆம் தேதி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் Fact check முறையை நீக்கிவிட்டு, எலான் மஸ்கின் எக்ஸ் பயன்படுத்தும் "சமூகக் குறிப்புகள்" (community notes) போன்ற ஒரு சேவையை மெட்டா நிறுவனம் கொண்டு வந்தது.


Click it and Unblock the Notifications