பேஸ்புக் தளத்தை உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது மெட்டா நிறுவனத்தின் சிஇஓ ஆக உள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க்-ன் ஆசை காதல் மனைவியான பிரிசில்லா சான்-க்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 3வது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை 3வது முறையாக அப்பாவாகியிருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் ஆசை ஆசையாக பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவில் மார்க் ஜூக்கர்பெர்க், Aurelia Chan Zuckerberg உன்னை உலகிற்கு வரவேற்கிறேன், நீ எங்களுக்கு வரம் எனவும் பதிவிட்டு உள்ளார். இத்துடன் குழந்தை மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ பார்ப்பது போல ஒரு புகைப்படத்தையும் பதவிட்டு உள்ளார்.
3வது பெண் குழந்தை
மார்க் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா சான் ஜோடிக்கு ஆகஸ்ட் என்ற 5 வயது பெண் குழந்தையும், மேக்சிமா என்ற 7 வயது குழந்தையும் உள்ளனர். தற்போது Aurelia 3வது பெண் குழந்தையாகும். பிரிசில்லா சான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை செப்டம்பர் மாதம் அறிவித்தனர்.
கர்ப்பம்
பிரிசில்லா சான் 3வது குழந்தை-க்கு கர்ப்பமாக இருக்கும் செய்தியை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிசில்லா சான் வயிற்றில் கையை வைத்திருக்கும் அழகான ஒரு போட்டோவை வெளியிட்டார்.
பிரிசில்லா சான்
அதன் பின்பு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பிரிசில்லா சான் 3வது குழந்தை-க்கு கர்ப்பமாக இருக்கும் போட்டோ உடன், மார்க் ஜூக்கர்பெர்க்-ன் மகள் அவரின் சர்ட் பட்டன் போடும் போட்டோவும் பதிவிட்டு இருந்தார்
காதல் கதை
2003 இல் ஒரு பார்ட்டிக்காக வரிசையில் காத்திருக்கும் போது ஜுக்கர்பெர்க்கும் சானும் முதன்முதலில் சந்தித்து காதல் வயப்பட்டனர், இருவருக்கும் ஒரு தனித்துவமான காதல் கதை உள்ளது. அந்த நேரத்தில ஹார்ட்வேர்டு பல்கலைக்கழகத்தில் மார்க் இரண்டாம் ஆண்டிலும், பிரிசில்லா சான் முதலாம் ஆண்டிலும் படித்து வந்தனர்.
திருமணம்
2010 இல் மார்க் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா சான் ஒன்றாக ஒரே வீட்டில் குடியேறினர், 2012 இல், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சான் அவர்களின் பாலோ ஆல்டோ வீட்டின் தோட்டத்தில் திருமணம் செய்துக்கொண்ட போது அவர்களின் விருந்தினர்கள் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் அனைத்து விருந்தினர்களையும் சானின் மருத்துவப் பள்ளி பட்டமளிப்பு விழா என்று தான் அழைத்திருந்தனர்.
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்
Facebook-ன் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் செவ்வாயன்று தனது பணியாளர்களில் சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். மெட்டா நிறுவனம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் புதிதாக 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது மெட்டா.
பணிநீக்கம் முடிவு
மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ஊழியர்களுக்கு அனுப்பிய மெசேஜ்-ல் தற்போது இருக்கும் மொத்த ஊழியர்களில் 10000 ஊழியர்களையும், பணியில் சேர்க்காமல் காலியாக இருக்கும் 5000 வேலைவாய்ப்புகளை முழுமையாக நீக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications