தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்களாக இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரின் தனிப்பட்ட பொருட்கள் சமீபத்தில் விற்பனையாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் பயன்படுத்திய ஆடைகள், கடிதங்கள் என அனைத்தும் பல லட்சங்களுக்கு ஏலம் போயுள்ளன. நடந்து முடிந்த ஏலத்தில் என்னென்ன பொருட்கள் விற்பனையாகியுள்ளன என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
2019-ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் இணை நிறுவனராக இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் அடிக்கடி அணிந்திருந்த ஒரு கருப்பு நிற ஹூடி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் நடந்த ஏலத்தில் 15,875 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு 14 லட்சம் ரூபாய் ஆகும். இந்த ஆடை "ஆல்டர்நேட்டிவ்" என்ற பிராண்டைச் சேர்ந்தது. 2010-ஆம் ஆண்டில், மார்க் ஜுக்கர்பெர்க் டைம் என்ற பத்திரிகை நிறுவனத்தால் "இந்த ஆண்டின் சிறந்த மனிதர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில், அவர் இந்த ஆடையை அடிக்கடி அணிந்திருந்தார்.

நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, இந்த ஆடையை ஏலத்தில் பெற்ற புதிய உரிமையாளருக்கு தன் கையால் எழுதிய ஒரு குறிப்பையும் மார்க் ஜுக்கர்பெர்க் அனுப்பியுள்ளார். "அதில் எனக்கு பிடித்த பழைய பேஸ்புக் ஹூடிகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப நாட்களில் இதை நான் அடிக்கடி அணிந்திருந்தேன்" என்று எழுதி அனுப்பியுள்ளார்.
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பிற பிரபலமான பொருட்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்த சிக்னேச்சர் பௌ டையும் ஒன்று. பலரும் கோட் சூட் போடுகையில் பௌ டை அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இது 35,750 டாலருக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 31 கோடியாகும். இது இவர் வாங்கிய 1,000 டாலரை விட 35 மடங்கு அதிகம் என்றே சொல்லலாம்.
இந்த பௌ டை 1984 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் ஸ்டீவ் ஜாப்ஸ் பல விழாக்களில் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு கும்பமேளா பிளான் குறித்த ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கடிதம் ரூ.4.32 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கையால் எழுதப்பட்ட கடிதம் இதுவாகும். ஏலத்தில் விடப்பட்ட தனிப்பட்ட கடிதமாக இது வரலாற்றை படைத்துள்ளது. இதன் மதிப்பு 5,00,312.50 அமெரிக்க டாலர்கள் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications