11000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், தற்போது அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க்-இன் பாதுகாப்புக்கான தொகையைச் சுமார் 14 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.
இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மெட்டா, தற்போதைய சூழலில் உயர்த்தப்பட்ட நிதி தகுதி மிகவும் தேவையான ஒன்று எனத் தெரிவித்து இருக்கிறது.
உலகின் முன்னணி நிறுவனங்களின் சீஇஓ-க்களுக்குப் பொதுவாகவே பாதுகாப்புக்கு அதிகப்படியான தொகையைச் செலவது இயல்பு தான், ஆனால் மார்க் ஜூக்கர்பர்க்-க்கிற்கு அதிகப்படியான தொகை செலவு செய்யப்படுகிறது.
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்
"ஜூக்கர்பர்க்-இன் ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டத்தில் தற்போது உயர்த்தப்பட்டு இருக்கும் நிதி தொகை, இந்தச் சூழலில் மிகவும் தகுதியான மற்றும் தேவையான ஒன்று ஆகும்." என மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு மார்க் ஜூக்கர்பர்க்-இன் பாதுகாப்புக்கு 10 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
14 மில்லியன் டாலர்
தற்போது மார்க் ஜூக்கர்பர்க்-இன் பாதுகாப்புக்கு 14 மில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி மெட்டா நிறுவனம் புதிதாக 4 மில்லியன் டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாயை கூடுதலாகச் செலவிட்டு அதன் நிறுவனரை பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறது.
பட்ஜெட் ஒதுக்கீட்டில் தாமதம்
கடந்த வாரம், மெட்டா நிறுவனம் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வரும் அணிகளுக்கு வருடாந்திர பட்ஜெட் தொகையை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் காட்டுவதாகத் தகவல் வெளியானது. மேலும் இதே காரணத்திற்காக மெட்டா நிறுவனத்தில் மேலும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு செக்யூரிட்டிக்கான நிதியை 14 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மெட்டா ஊழியர்கள்
முன்னதாக ஃபைனான்சியல் டைம்ஸ் தகவல்களை வைத்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், மெட்டா நிறுவனம் பல்வேறு குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் செய்திருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்துத் தகவல் தெரிவித்த இரு மெட்டா ஊழியர்கள், நிதி மற்றும் எதிர்காலப் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்து நிறுவனம் சார்பில் கடந்த சில வாரங்களாகப் போதுமான விழிப்புணர்வு கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா பிளாட்பார்மஸ் 2022 ஆம் ஆண்டில் 12000 ஊழியர்களை ஓரே நேரத்தில் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது நிறுவனத்தில் இருக்கும் அனைத்து மேனேஜர் மற்றும் டைரக்டர் புதவிகளில் இருப்பவர்களை வெறும் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்யாமல்...
கோடிங், டிசைன்
தனிநபராக அவர் அவர் வேலையில் பங்களிக்கும் வகையில், கோடிங், டிசைன் போன்று அவர் பணியாற்றும் பிரிவில் கூடுதலான பங்களிப்பு அளிக்க வேண்டும் இல்லையெனில் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுங்கள் என மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளார்.
மெட்டா பிளாட்பார்மஸ் ஸ்டக்ச்சர்
மெட்டா பிளாட்பார்மஸ் மொத்தமாகத் திறமைமிக்க அமைப்பாக மாறி வரும் வேளையில், நிறுவனத்தில் அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகையை flattening ஸ்டக்ச்சரை மார்க் ஜூக்கர்பெர்க் இந்த அறிவிப்பை மிகவும் கடுமையாக எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications