மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள படேக் பிலிப் வாட்ச்சை அணிந்து கொண்டு அழகாக போஸ் கொடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகின் மூன்றாவது பணக்காரரான மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாகிராமில் ஒரு பயனரின் கேள்விக்கு பதிலளித்து, தனது வாட்ச்சின் பிராண்ட் மற்றும் மாடலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மார்க் சக்கர்பெர்க்கின் படேக் பிலிப் வாட்ச்: செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி பிரிஸ்கில்லா காணின் தோல் மீது கையைப் போட்டுக் கொண்டிருக்கும் போட்டோவை பதிவிட்டிருந்தார். இந்த பிராண்ட் உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரத்தியேகமான வாட்ச்சை தயாரிப்பதற்காக அறியப்படும் பிராண்ட்டாகும்.

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் மார்க் சக்கர்பெர்க்கிடம் "படேக் பிலிப் எந்த மாடல்? என்று கேட்டதற்கு, இந்தக் கோடீஸ்வரர் "5236P" என்று பதிலளித்திருந்தார். 5236P என்பது படேக் பிலிப்பின் குறிப்பிட்ட மாடல் கடிகாரத்தை குறிக்கிறது. படேக் பிலிப் இணையதளம் மார்க் சக்கர்பெர்க் அணிந்திருக்கும் வாட்ச்சின் விலையை வெளியிடவில்லை.
வழக்கம் போல இணையதளத்தில் பிற உயர்தரப் பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் குறிப்பிட்ட மாடல், அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பொறுத்து $120,000 முதல் $150,000 வரை செலவாகியிருக்கும் என்று இணையத்தில் உள்ள பிற ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது இந்திய மதிப்புக்கு ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கலாம்.
படேக் பிலிப் வாட்சின் விவரங்கள் சமீபத்தில் வாட்ச் நியூஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தால் வெளியிடப்பட்டது.
அனந்த் அம்பானியின் வாட்ச்சை பாராட்டிய மார்க் சக்கர்பெர்க்: மார்க் சக்கர்பெர்க் சில நாட்களுக்கு முன்பு ஜாம்நகரில் நடைபெற்ற இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் வாட்சை பாராட்டிய வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் பரவின. மார்ச் மாதம் ஆன்லைனில் வெளியான வீடியோக்களில், சக்கர்பெர்க் அனந்த் அம்பானியின் கடிகாரத்தை பாராட்டியிருந்தார்.
நான் ஒருபோதும் கடிகாரம் வாங்க விரும்பியதே இல்லை. ஆனால் தற்போது எனக்கு வேண்டும் என்பது போலிருக்கிறது என்று மார்க் சக்கர்பெர்க் ஆனந்த அம்பானியிடம் கூறியிருந்தார், மேலும் அவர் முகேஷ் அம்பானியின் வாட்ச் குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு முகேஷ் அம்பானி தான் ரிச்சர்ட் மில்லே வாட்ச்சை அணிந்திருப்பதாக பதில் அளித்தார்.
ரிப்போர்டுகளின்படி, அனந்த் அம்பானி ரிச்சர்ட் மில்லே RMS-10 Tourbillon Koi Fish-ஐ அணிந்திருந்தார். 18 கேரட் ரோஸ் கோல்டில் வடிவமைக்கப்பட்டு வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கடிகாரம், கோய் மீனின் 3D வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கடிகாரத்தின் துல்லியமான விலை தெரியவில்லை, ஆனால் ஆர்வலர்கள் அதன் விலை குறைந்தது 1 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்திய மதிப்புக்கு ரூ.8.4 கோடி.


Click it and Unblock the Notifications