மார்க் சக்கர்பெர்க் தற்போது புதிய ஃபேஷன் தொழிலைத் தொடங்கியுள்ளார். மெட்டா நிறுவனத்தின் 40 வயதான CEO-ஆன இவர், தனது சொந்த டி-ஷர்ட்டுகளை வடிவமைக்க உள்ளார். கடந்த மாதம் ஒரு பாட்காஸ்ட்டில், இவர் தனக்கு விருப்பமான கிரேக்க மற்றும் இலத்தின் சொற்களை கொண்ட டி-ஷர்ட்டுகளை வடிவமைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மார்க் சக்கர்பெர்க்கின் டி-ஷர்ட்டுகள்: மார்க் சக்கர்பெர்க் சமீபத்தில் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து காணப்பட்டார். அதில் "pathei mathos" என்ற கிரேக்க சொற்றொடர் வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இதன் பொருள் "துன்பத்தின் மூலமே கற்க முடியும்" என்பதாகும்.

அதே போல மெட்டாவின் முக்கிய அறிவிப்பு நிகழ்ச்சியில், மார்க் சக்கர்பெர்க் அணிந்த டி-ஷர்ட்டில் "aut Zuck, aut nihil" என்ற சொற்றொடர் அச்சிடப்பட்டிருந்தது. இது லத்தின் மொழியில் "aut Caesar, aut nihil" என்ற சொற்றொடரின் ஆங்கில வார்த்தையாகும். இது பெரும் லட்சியத்தை குறிக்கும் பழமொழி என்றும், ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்டது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட ஆடை வடிவமைப்பாளரான மைக் அமிரியுடன் இணைந்து மார்க் சக்கர்பெர்க் இந்த டி-ஷர்டை உருவாக்கி வருகிறார். மைக் அமிரி தனது ஃபேஷன் பிராண்டான AMIRI-ஐ 2014-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். இது நியூயார்க்கில் உள்ள பெர்க்டார்ஃப் குட்மேன், பெவர்லி ஹில்ஸில் உள்ள நெய்மன் மார்கஸ், பாரிஸில் உள்ள கேலரிஸ் லாஃபாயெட், லண்டனில் உள்ள செல்ஃப்ரிட்ஜஸ் & ஹாரோட்ஸ், உட்பட உலகெங்கிலும் உள்ள 160-க்கும் மேற்பட்ட உயர்நிலை சில்லறை விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்படுகிறது.
AMIRI பிராண்ட் பெவர்லி ஹில்ஸ், நியூயார்க், லாஸ் வேகாஸ், மியாமி, சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா, ஷாங்காய், டோக்கியோ, நான்ஜிங் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் தனி கடைகளையும் கொண்டுள்ளது.
ரோமானிய வரலாற்றில் மார்க் சக்கர்பெர்க்கின் ஆர்வம்: ரோமானிய பேரரசு குறித்து தெரிந்துகொள்வதில் மார்க் சக்கர்பெர்க் எப்போதும் ஆர்வமாக இருப்பார். தனது இரண்டு குழந்தைகளுக்கு அகஸ்டஸ் மற்றும் மார்கஸ் போன்ற ரோமானிய அரசர்களின் பெயரைக் கொண்டு ஆகஸ்ட் மற்றும் அரேலியா என்ற பெயரை வைத்துள்ளார்.
இதிலிருந்து மார்க் சக்கர்பெர்க் டி-ஷர்ட்களை தயாரிக்க உள்ளார் என்பது தெளிவாகிறது. இனிவரும் நாட்களில் தான் இந்த டி-ஷர்ட்டுக்கான விற்பனை விபரங்கள் குறித்து தெரிய வரும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications