மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனரும் சிஇஓவுமான மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.14 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. சுமார் 177 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு எதிர்பாராத வகையில் மளமளவென்று அதிகரித்துவிட்டது. மெட்டாவின் நிகர மதிப்பு ஏறத்தாழ மூன்று மடங்கு ஆகிவிட்டது. இதன் மூலம் உலகின் 4 ஆவது மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிட்டார் மார்க் ஜுக்கர்பெர்க். இதற்கு முன் அவர் இந்தப் பட்டியலில் 16ஆவது இடத்தில் இருந்தார்.

இப்படி செல்வத்தின் உச்சாணிக் கொம்புக்கு சென்றுள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனப் பங்குகள் 2021இல் 75 சதவீதம் வரை மதிப்பு குறைந்தது. இந்த நிலையில் நிறுவனத்தின் நிதிநிலை சரி செய்ய 25 சதவீதத்துக்கு அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். செலவுகளை குறைத்தார், இதைத் தொடர்ந்து மெட்டா பங்குகள் உயர துவங்கியது.
மார்க்கெட் கொந்தளிப்பால் சரிவு: மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிதி நிலைமை பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளது. 2022இன் பிற்பகுதியில் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்ட பணவீக்கத்தால் அவரது சொத்து மதிப்பு 35 பில்லியனுக்குக் கீழே குறைந்தது. ஆனால் 2023இல் மார்க் ஜுக்கர்பெர்க் சட்டென்று மீண்டு வந்தார்.
2023 ஆண்டு துவக்கத்தில் வெறும் 64.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்திருந்த மார்க் ஜூக்கர்பெர்க் ஓரே வருடத்தில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்து 177 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மெட்டாவின் முக்கிய உத்தியகள்: அண்மையில் மெட்டா தனது ஒரு பங்குக்கு 50 சென்ட்களை ஈவுத்தொகையாக காலாண்டுக்கு வழங்குவதாக விடுத்த அறிவிப்பு கம்பெனியின் வளர்ச்சி மீது அது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் திட்டங்களில் கணிசமாக முதலீடு செய்தபோதிலும் ஈவுத்தொகை வழங்கும் மெட்டாவின் முடிவு தனது பங்குதாரர்களை சமநிலையில் கையாளும் உத்தியைக் காண முடிந்தது.
ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் லிமிட்டான கையகப்படுத்துதல்களை மேற்கொண்டபோதிலும் இந்த உத்தியை மெட்டா கையாண்டது பாராட்டுக்குரியதாகும்.
முக்கியமான நிலைப்பாடு: மெட்டாவின் நோக்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் திட்டமிட்ட சீரமைப்புகளால் அந்த நிறுவனத்தின் பங்கு ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு சரசரவென மதிப்பு உயர்ந்தது. 2023இல் கிட்டத்தட்ட 3 மடங்கு ஆனது.
ஈவுத்தொகை வழங்கல், கூடுதலாக 50 பில்லியன்கள் பங்குகளை வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்தது போன்ற நடவடிக்கைகள் மெட்டாவின் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது.
இது ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்க்காக மார்க் ஜுக்கர்பெர்க்கின் தொலைநோக்கு சிந்தனையை சுட்டிக் காட்டுகிறது.
சம்பளம் மற்றும் தனிப்பட்ட முயற்சிகள்: 2022இல் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சம்பளம் 27.1 மில்லியன் டாலர்கள் ஆகும். இதில் பாதுகாப்பு செலவுகள் மற்றும் அடிப்படை சம்பளம் அடங்கும். இதனிடையே மெட்டாவின் முந்தைய ஆண்டுக்கான எக்ஸிகியூட்டிவ் சம்பளம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இது தவிர மார்க் ஜுக்கர்பெர்க்கின் போர்ட்போலியோ மாற்றியமைப்பு, கல்போர்னியா மேன்ஷன் விற்பனை, 300 மில்லியன் டாலர்களுக்கு சொகுசு படகு வாங்கியது ஆகியவை அவரது தனிப்பட்ட முயற்சிகளாகும்.
உலகளாவிய பில்லியனர்கள்: உலகளவில் எல்விஎம்எச் தலைவரான பெர்னார்டு அர்னால்டு 233 பில்லியன் டாலர்களுடன் டாப் பணக்காரராக விளங்குகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் எலான் மஸ்க்கும் ஜெப் பெசோஸும் உள்ளனர். இருவரும் தலா 195 மில்லியன் டாலர்கள் வைத்துள்ளனர்.
2024 ஏப்ரல் 3 ஆம் தேதிப்படி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்-
1 பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் $222.4 பில்லியன்
2 ஜெஃப் பெசோஸ் $198.7 பில்லியன்
3 எலான் மஸ்க் $190.2 பில்லியன்
4 மார்க் ஜுக்கர்பெர்க் $174.4 பில்லியன்
5 லேரி எலிசன் $153.4 பில்லியன்
6 வாரன் பஃபெட் $137.7 பில்லியன்
7 பில் கேட்ஸ் $130.7 பில்லியன்
8 லாரி பேஜ் $128.8 பில்லியன்
9 ஸ்டீவ் பால்மர் $124.7 பில்லியன்
10 செர்ஜி பிரின் $123.7 பில்லியன்
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications