பலர் நிஜ வாழ்க்கையைத் தேடி அலைந்துகொண்டு இருக்கும் வேளையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மட்டும் டிஜிட்டல் உலகான மெட்டாவெர்ஸ்-ஐ தேடிச் சென்றார்.. இதன் விளைவு என்ன தெரியுமா..?
2022 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்து அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கும், டெக் நிறுவன தலைவர்களுக்கும் மோசமான காலம் என்றாலும் மார்க் ஜூக்கர்பெர்க் மட்டும் அதிகப்படியான சரிவையும் பாதிப்பையும் எதிர்கொண்டு உள்ளார். இதனாலேயே மார்க் ஜூக்கர்பெர்க்-ன் வீழ்ச்சி வர்த்தகத் துறையில் தனித்துவமாகத் திகழ்கிறது.
மெட்டா நிறுவனத்திற்கும், மார்க் ஜூக்கர்பெர்க்-க்கும் என்ன ஆச்சு..?
மெட்டவெர்ஸ்
2021ல் இறுதியில் விர்ச்சுவல் உலகான மெட்டவெர்ஸ் துறைக்குள்ள நுழைவதை உறுதி செய்யும் வகையில், தான் ஒரு சமூகவலைத்தள நிறுவனம் மட்டும் இல்லை என்பதை முதலீட்டாளர்களுக்கு உணர்த்தும் வகையில் பேஸ்புக் நிறுவனத்தை மறுசீரமைப்புச் செய்து அனைத்து சமுகவலைதள நிறுவனத்தையும் தனித்தனி நிறுவனமாகப் பிரித்து மெட்டா என்னும் தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
பேஸ்புக் நிறுவனம்
இந்த மறுசீரமைப்புக் காரணமாகச் சில பிரச்சனைகள் இருந்தாலும் உண்மையான பிரச்சனை 2022ல் பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்படலாம் என அறிவித்த பின்பு தான் உருவானது. டிக்டாக் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என அறிவிப்பை வெளியிட்டது.
71 பில்லியன் டாலர்
இது முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் அதிர்ச்சி அடையச் செய்தது, இதனால் முதலீட்டாளர்கள் மெட்டா பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்த காரணத்தால் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 71 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. பல ஆண்டுகளாக டாப் 10 உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்ன் தற்போதைய நிலை என்ன தெரியுமா..
மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் 55.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20வது இடத்தில் உள்ளார், 2014-க்கு பின்பு பெரிய அளவில் பின்தங்கியுள்ளார், தற்போது முன்னணி டெக் பில்லியனர்களைத் தாண்டி வால்மார்ட் வால்டன் குடும்பம், கோச் இண்டஸ்ட்ரீஸ் கோச் குடும்ப உறுப்பினர்களுக்குப் பின்னால் உள்ளார் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்.
பெரும் வீழ்ச்சி
செப்டம்பர் 2021-ல் மார்க் ஜூக்கர்பெர்க் 142 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு வைத்திருந்த நிலையில் இவருக்கு முன்னால் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் ஆகிய 2 பேர் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 20 பேர் உள்ளனர். வாடிக்கையாளர் வளர்ச்சி குறித்து அறிவித்த நாளில் மட்டும் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 31 பில்லியன் டாலர் வரையில் சரிந்தது.
FAANG நிறுவனங்கள்
2022ல் FAANG நிறுவனங்களில் பேஸ்புக் பங்குகள் 57 சதவீதமும், ஆப்பிள் 14 சதவீதமும், அமேசான் 26 சதவீதமும், ஆல்பபெட் 29 சதவீதமும், நெட்பிளிக்ஸ் 60 சதவீதமும் சரிந்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க்-ன் சொத்து மதிப்பு பெரும் பகுதி மெட்டா பங்குகளைச் சார்ந்து இருக்கும் நிலையில் மெட்டா பங்கு சரிவின் காரணமாக இவருடைய சொத்து மதிப்பும் 71 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications