கூட்டணி ஆட்சியால் இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் லாபமா? என்ன காரணமா இருக்கும்?

டெல்லி: பொதுவாக கூட்டணி ஆட்சி அமையும் போது எந்த கட்சி கூட்டணிக்கு ஆதரவு தருகிறதோ அந்த கட்சி தீவிரமாக செயல்பட்டு வரும் மாநிலங்களில் இருக்கும் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடையும் என கணிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது மத்திய அரசுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளது. இந்த அறிவிப்பினை அடுத்து பங்குச்சந்தையில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் மதிப்புகள் ஏற்கனவே உயர தொடங்கிவிட்டன. அந்த வகையில் எந்தெந்த நிறுவனங்களின் மதிப்புகள் வரும் காலங்களில் உயர்வதற்கான வாய்ப்புள்ளது என்பது குறித்து பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வாளரான சுனில் கர்ஜார் தெரிவித்துள்ள பட்டியலை இங்கு நாம் விரிவாக பார்க்கலாம்.

அஞ்சானி புட்ஸ்(Anjani Foods): பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய அஞ்சானி புட்ஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 46.3 கோடி ரூபாய் நிறுவனத்தின் நிகர லாபம் 1.4 கோடி ரூபாய்.

 கூட்டணி ஆட்சியால் இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் லாபமா? என்ன காரணமா இருக்கும்?

டெக்கான் சிமெண்ட்(Deccan Cement): சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் 1979ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் இந்திய ரயில்வே துறையும் ஒன்று. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் காற்றாலை மற்றும் ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்களையும் வைத்துள்ளது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 815 கோடி ரூபாய் நிகர லாபம் 35.4 கோடி ரூபாய்.

கிரேன் குரூப்( Crane Infrastructure): ரியாலிட்டி நிறுவனமான இது சொத்துக்களை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 3.6 கோடி ரூபாய் இதில் லாபம் மட்டும் 1.4 கோடி.

பிஜிஆர் எனர்ஜி(BGR Energy): பல்வேறு கட்டுமான பணிகளுக்கு தேவையான சேவைகளை வழங்கி வரக்கூடிய இந்த நிறுவனம் , மின் உற்பத்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் 2024 ஆம் நிதியாண்டில் 1120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதில் 752 கோடி லாபத்தையும் பெற்றுள்ளது.

கோஸ்டல் கார்ப் (Coastal Corp): 1981 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் கடல் சார் உணவுப் பொருட்களை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு வருமானம் 430 கோடி ரூபாய் இதில் லாபம் 8.2 கோடி.

நேட்கோ பார்மா (Natco Pharma): மருந்து பொருட்கள் மற்றும் வேளாண்மைக்கு தேவையான ரசாயனங்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனம் இது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலும் துணை நிறுவனங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. 3,673 கோடி ரூபாய் நிறுவனத்தின் வருவாயாகவும் நிறுவனத்தின் நிகர லாபம் 1306 கோடி ரூபாயாகவும் உள்ளது.

லாரஸ் லேப் (Laurus Lab): ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய மருந்து மற்றும் பயோடெக் நிறுவனம் இது. அமெரிக்கா, பிரிட்டன் ஜெர்மனி மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 4,859 கோடி, இதில் லாபம் 223.7 கோடி ரூபாய்.

அரபிந்தோ பார்மா (Aurobindo Pharma): மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு இருக்க கூடிய இந்த நிறுவனம் மருந்து துறையில் பல்வேறு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. சாதாரண மக்களும் வாங்கக்கூடிய விலைக்கு இது மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 11,261.7 கோடி ரூபாய் ஆகும்.

ராம்கோ குழுமம்(Ramco Group) : சிமெண்ட் ,பைபர் சிமெண்ட், காட்டன் நூல் மற்றும் ஐடி துறை என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரக்கூடிய ராம்கோ குழுமம் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் வருவாய் 9,392 கோடி, இதில் லாபம் 395 கோடி ரூபாய். ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் 133 கோடி, நிகர லாபம் 59 கோடி ரூபாய். ராம்கோ சிஸ்டம் நிறுவனத்தின் வருமானம் 275 கோடி ரூபாய்.

என்.சி.எல்(NCL): நாகார்ஜுனா சிமெண்ட் பிராண்ட் என்ற பெயரில் செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் ஆந்திரா, தெலுங்கானா ,கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிமெண்ட் உற்பத்தி ஆலைகளையும் இரண்டு ஹைட்ரோ பவர் நிலையங்களையும் வைத்துள்ளது, 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 1,899 கோடி ரூபாய் வருமானமும் 94 கோடி லாபமும் பெற்றுள்ளது.

அமர ராஜா பேட்டரி (Amara Raja Batteries) 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமர ராஜா பேட்டரி நிறுவனம் ,தற்போது பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் இந்திய ரயில்வே மற்றும் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மாருதி சுசுகி, மகேந்திரா, ஹோண்டா நிறுவனங்களுக்கு தேவையான பேட்டரிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 1161 கோடி ரூபாய் இதில் லாபம் 900 கோடி ரூபாய்.

ஒலக்ட்ரா கிரீன் டெக்(Olectra Greentech): இந்தியாவின் முதல் மின்சார பேருந்து உற்பத்தியாளரான இந்த நிறுவனம் 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு பொது போக்குவரத்து துறைகளுக்கும் பேருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் இதன் வருமானம் 1126 கோடி ரூபாய் இதில் லாபம் 74 கோடி.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+