அதானி குழுமத்தின் மீதும் செபியின் தலைவர் மாதபி புரி புச் மீதும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் நாளை மார்க்கெட் திறக்கும்போது சரிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது கடந்த வருடமும் குற்றச்சாட்டுகளை வைத்தது. அப்போது செபி தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் அதானி குழுமத்தின் மீது எடுக்கப்படவில்லை.
பொதுவாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியாகும் போது இந்தியாவில் பெரிய பரபரப்பு ஏற்படும். அந்த வகையில் நேற்று "something big soon India" என்ற போஸ்டை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று அதானி குழுமத்தின் பங்குகளை முறைகேடாக உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்த கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சொந்தமான மொரிஷியஸ் நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு உள்ளதாக அதிர்ச்சி தகவலை ஹிண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
என்ன புகார் எழுந்தது?: அமெரிக்காவின் ஷார்ட் செல்லர் ரிசர்ச் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. அதன்படி அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதபி புரி புச்சும் அவரது கணவர் தவால் புச்சும் பங்குகளை வைத்துள்ளதாக குற்றம் சாட்டியது.
இதன் காரணமாகத்தான் கடந்த ஆண்டில் அதானி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தும் எந்தவித நடவடிக்கையும் செபியின் தரப்பில் எடுக்கப்படவில்லை. ஒருவேளை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பங்குகளின் மதிப்பில் சரிவு ஏற்பட்டிருக்கும். இது அவர்களுடைய முதலீட்டையும் பாதிக்கும் என்று எண்ணித்தான் செபி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்று அந்த குற்றச்சாட்டில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தை பாதிப்பு: தற்போது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக நாளை பங்குச்சந்தை ரத்தக்களறியாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிவதற்கு அதிக வாய்ப்புள்ளன. அதேபோல அதன் பின் விளைவுகள் காரணமாக மற்ற பங்குகளின் மதிப்பும் சரிய வாய்ப்புள்ளது.
ஏனெனில் செபிதான் பங்குச்சந்தையின் ஒழுங்கு முறை ஆணையமாக செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தின் மேலே தற்போது புகார் எழுந்துள்ள காரணத்தினால்.. மொத்தமாகவே பங்குச்சந்தையில் பல சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாதபி புரி புச் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையை மறுத்துள்ளனர். ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியானது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவிலேயே அதற்கு பதில் அளித்த மாதபி புச் மற்றும் அவரது கணவர் தங்களுடைய பெயரை கெடுக்க முயற்சிப்பதற்காகவே, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் மீது ஏற்கனவே செபி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பதிலடி தரவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications