பெற்றோர்கள் அனைவரும் தங்களது மகன் அல்லது மகள் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்றே விரும்புவார்கள். இதற்காக நீண்ட காலமாக சேர்த்து வைத்த சேமிப்பை எடுத்து செலவிடுகிறார்கள், அப்படி சேமிப்பு இல்லாதவர்கள் கடன் வாங்கி திருமணத்தை நடத்துவார்கள்.
கல்யாண கடன் பெற்றோருக்கு பெரிய பாரமாக அமைந்து விடுகிறது. ஆனால் தற்போதைய தலைமுறையினர் தங்களது திருமண செலவுக்கு பெற்றோரிடம் பணம் அளிக்கும் போக்கு உள்ளது. இதன் மூலம் பெற்றோரின் சுமையை அவர்கள் குறைக்கிறார்கள். அண்மையில் இளம் தலைமுறையினரிடம் திருமண செலவுகள் தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த அக்டோபர்-நவம்பர் காலத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 1,200 பேர் பங்கேற்றனர். இது தொடர்பாக வெளியான இந்தியாலெண்ட்ஸ் வெட்டிங் ஸ்பெண்ட்ஸ் அறிக்கை 2.0-ல், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களில் 41 சதவீதம் பேர் தங்கள் திருமணங்களுக்கு தங்களது சொந்த நிதியை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
26 சதவீதம் பேர் கல்யாண செலவுக்காக தனிநபர் கடன் வாங்குவது குறித்து யோசனையில் உள்ளனர். 33 சதவீதம் பேர் இன்னும் முடிவு செய்யாமல் உள்ளனர். கடன் வாங்க நினைப்பவர்களில் 68 சதவீதம் பேர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக திருமண செலவுகளுக்காக பாரம்பரியமான தனிநபர் கடன்கள் வழங்கப்படுகிறது. தற்போது புதிதாக மேரி நவ், பே லேட்டர் (MNPL) என்ற திருமண கடன் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கல்யாண கடன் மற்றும் எம்.என்.பி.எல். திட்டம் ஆகிய இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
திருமண கடன்கள்: வங்கிகள் மற்றும் பின்டெக் கடன் வழங்கும் நிறுவனங்கள் திருமண கடன்களை வழங்குகின்றன. கடன் வாங்குபவர்கள் ஒரு மொத்த தொகையை முன்கூட்டியே பெற்று நிலையான மாதாந்திர தவணைகள் மூலம் செலுத்துவார்கள்.
கடன் விண்ணப்பதாரரின் வருமானம், வேலைவாய்ப்பு நிலைத்தன்மை, வருமானத்தில் கடன் விகிதம், வயது மற்றும் குடியுரிமை போன்ற காரணிகள் திருமண கடனுக்கான முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது.
இது தவிர வேலைவாய்ப்பு சரிபார்ப்பு, சமீபத்திய வங்கி அறிக்கைகள் மற்றும் கடன் அறிக்கைகள் ஆகியவை விண்ணப்பதாரரின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு பொதுவாக கோரப்படுகின்றன.
திருமணத்துக்காக ரூ.1 கோடி வரை கடன் வழங்குகின்றன. வங்கிகளை பொறுத்து கடனை திருப்பி செலுத்துவதற்காக 84 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. திருமண கடன்களுக்கான வட்டி விகிதம் வங்கி மற்றும் கிரெடிட் விவரங்களை பொறுத்து மாறுபடும்.
உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் இந்த கடனுக்கான வட்டி விகிதம் பொதுவாக ஆண்டுக்கு 10.65 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் வங்கியில் வட்டி விகிதம் 10.75 சதவீதத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. மேலும் லாக் இன் பீரியட் காலத்துக்கு முன்பாக கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் ப்ரீபேமெண்ட் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
எம்.என்.பி.எல். திட்டம்: ஹோட்டல் சங்கலிகளுடன் பார்ட்னராக இருக்கும் பின்டெக் கடன் வழங்குனர்கள் இதனை செயல்படுத்துகிறார்கள். இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர் சார்பாக பணம் வழங்குவார்கள்.
உதாரணமாக பின்டெக் நிறுவனமான SanKash கூட்டாளராக உள்ள ஹோட்டலில் எம்.என்.பி.எல். திட்டத்தை வாடிக்கையாளர் தேர்வு செய்தால், SanKash வாடிக்கையாளரின் கடன் விவரம் மற்றும் வேலைவாய்ப்பு பின்னணியை மதிப்பீடு செய்கிறது. கடன் அங்கீகரிக்கப்பட்டவுடன் வாடிக்கையாளர் சார்பாக ஹோட்டலுக்கு அந்நிறுவனம் பணம் செலுத்தும்.
வாடிக்கையாளரின் வாடிக்கையாளர் மூன்றாம் தரப்பு தரவு மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறார். இதில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஐ.டி.கள், முகவரி ஆதாரம், வங்கி அறிக்கைகள், சம்பள சீட்டுகள், வருமான வரி அறிக்கைகள் அடங்கும். அதிகபட்சம் ரூ.25 லட்சம் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்துவதற்கு அதிகபட்சம் 36 மாதங்கள் கால அவகாசம் வழங்குகின்றன. 3 மற்றும் 6 மாதங்களுக்கு வட்டியில்லாத காலம் சலுகை வழங்குகின்றன.
அதன் பிறகு, வாடிக்கையாளரின் கடன் விவரத்தை பொறுத்து, ஒரே விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் 0.5 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகின்றன. முன்கூட்டி பணம் திரும்ப செலுத்தினால் அபராதம் எதுவும் விதிக்கப்படாது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications