டெல்லி : முன்னணி கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
இதனால் அதிகளவிலான செலவினங்கள், ஜிஎஸ்டி, உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, மந்தமான விற்பனை, வேலையிழப்புகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, தனது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் உற்பத்தியை தொடர்ந்து குறைத்து வருகிறது.
உற்பத்தி குறைப்பு
இந்த நிலையில் தொடர்ந்து 9-வது மாதமாக அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1,19,337 கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதாகவும், இதுவே முந்தைய ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1,50,497 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டோடு 20.7 சதவிகிதம் அதிகரிப்பு ஆகும். இது இந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது.
பயன்பாட்டு வாகனங்கள் அதிகரிப்பு
இதே நடுத்தர அளவிலான கார்கள் உற்பத்தி 45 சதவிகிதம் குறைந்து, வெறும் 1,922 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 3,513 வாகனங்களாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே விஸ்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா அண்ட் எஸ்-கிராஸ் போன்ற பயன்பாட்டு வாகனங்கள் உற்பத்தி 0.93 சதவிகிதம் அதிகரித்து வாகனங்கள் உற்பத்தி 22,736 வாகனங்களாக செய்யப்பட்டுள்ளது. இது முன்னர் 22,526 வாகனங்களாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து உற்பத்தி குறைவு
இதே ஆல்டோ, வேகன் ஆர், செலெரியோ, இக்னிஸ், பலேனோ, ஸ்விஃப்ட், டிசையர் போன்ற சிறிய ரக, காம்பாக்ட் பிரிவு கார்களுக்கான உற்பத்தி எண்ணிக்கை 85,064 ஆகக் குறைந்துள்ளது. 2018 அக்டோபரில் இந்த எண்ணிக்கை 1,08,462 ஆக இருந்தது. இலகு ரக வாகனங்கள் பிரிவில், சூப்பர் கேரி வாகன உற்பத்தி 2,179லிருந்து 1,954 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் பயன்பாட்டு வாகனங்களான விடெரா பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்.எல்.6, எஸ்-கிராஸ் ஆகிய வாகனங்களுக்கான உற்பத்தி 0.93 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
விற்பனை வீழ்ச்சி
இதே பயணிகள் வாகன உற்பத்தியானது 86,986 வாகனங்களாக செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு 1,11,975 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே விற்பனையைப் பொறுத்தவரையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1,39,121 வாகனங்களை மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு 1,35,948 வாகனங்களாக விற்பனையை செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பண்டிகை சீசனில் விற்பனை சிறப்பாக இருந்ததால் அக்டோபர் மாதத்தில் மாருதி சுசூகி சிறப்பான வளர்ச்சியைப் பதிவுசெய்தது. கடந்த மார்ச் 2019ல் 1,45,031 வாகனங்களாக உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications