ஏப்ரல் 1 முதல் மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து அனைத்து வகையான வாகன மாடல்களுக்கான விலையினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது சுமார் 0.8 சதவீதம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாத இறுதியில் மாருதி சுசூகி நிறுவனம் தங்களது வாகனங்களுக்கான விலையை உயர்த்த போவதாக அறிவித்திருந்தது. டெல்லி மாருதி சுசுகி ex-showroom விலைப்படி இந்த புதிய விலை கணக்கிடப்பட்டுள்ளது.
ஏன் விலை அதிகரிப்பு?
இது வாகனங்களுக்கான மாடலை பொறுத்து இந்த விலையேற்றம் மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து வாகனங்கள் உற்பத்திக்கு தேவையான மூலதன பொருட்களுக்கான விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வாகன விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டாவது முறை
தொடர்ந்து மாருதி சுசூகி உள்பட பல்வேறு வாகன நிறுவனங்களும் வாகன உற்பத்தி செலவானது அதிகரித்து வரும் சூழலில், வாகன விலையை உயர்த்தியுள்ளன. இது குறித்து மாருதி சுசூகி நிறுவனமும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி 2023ல் மாருதி அதன் வாகன விலையை உயர்த்தியது. அந்த சமயத்தில் வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப 1.1 சதவீதம் அளவுக்கு விலை அதிகரிப்பட்டது.
பங்குக்கு சாதகமாக அமையலாம்
இந்த காலகட்டத்தில் மாருதி தவிர, ஹோண்டா கார்கள், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பல்வேறு கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனமும் ஏப்ரல் 1 முதல் விலை அதிகரிப்பினை செய்துள்ளன.
இது நடுத்தர மக்கள் மத்தியில் இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். மாருதி சுசூகியின் இந்த முடிவால், மாருதி நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம். இது நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது அதிகரிக்க வழிவகுக்கலாம்.
மாருதி நிறுவனத்தின் விற்பனை
மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன விற்பனை குறித்தான அறிவிப்பினையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தின் வாகன விற்பனையானது 1,70,071 ஆக குறைந்துள்ளது. டீலர்களுக்கு செய்யப்படும் சப்ளையானது 3% குறைந்து, 1,39,952 வாகனங்களாக குறைந்துள்ளது. எனினும் ஏற்றுமதியானது 14% அதிகரித்து, 30,119 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
மின்சார வாகனங்கள் உற்பத்தி?
2022-23 நிதியாண்டில் வாகன உற்பத்திக்கான எலக்ட்ரானிக் பாகங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக வாகனங்களின் உற்பத்தியில் தாக்கம் இருந்தது. இதனால் உற்பத்தியானது குறைந்துள்ளது. இதனை சரி செய்ய நிறுவனம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆக இது இனி வரவிருக்கும் மாதங்களில் இதன் தாக்கம் தெரிய வரும் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications