டெல்லி: நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா கடந்த சில மாதங்களாகவே விற்பனை, வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 4.5 சதவிகிதம் விற்பனை அதிகரித்து, மொத்த வாகன விற்பனை 1,53,435 வாகனங்களாகவும் அதிகரித்துள்ளது.
இதே கடந்த ஆண்டு இதே மாதம் மாருதி சுசூகி நிறுவனம் 1,46,766 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.5 சதவிகிதம் அதிகரித்து, 1,44,277 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,38,100 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே மினி கார்களான ஆல்டோ, வேகன் ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களின் விற்பனையானது, 28,537 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 32,835 யூனிட்களாக இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 13.1 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதே காம்பாக்ட் பிரிவில் ஸ்விப்ட், செலிரியோ, பலினோ, டிசையர் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனையானது 15.9 சதவிகிதமாக அதிகரித்து, 75,094 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 64,789 வாகனங்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே நடுத்தர வாகனங்களான செடான் சியாஷ் 2,371 யூனிட்கள் விற்பனை செய்திருப்பதாகவும், இதே முந்தைய ஆண்டில் 3,892 யூனிட்களாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 39.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே பயன்பாட்டு வாகனங்கள் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா 23,108 யூனிட்களாகவும், இது முந்தைய ஆண்டு 20,764 யூனிட்களாகவே இருந்துள்ளது.
இதே ஏற்றுமதி 5.7 சதவிகிதம் அதிகரித்து 9,158 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே 8,666 யூனிட்களாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே கடந்த மே மாதத்தில் மாருதி சுசூகி 22 சதவிகிதம் விற்பனை குறைந்து, 1,34,641 யூனிட்களாகவும் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் காலாண்டில் நிகரலாபம் 27 சதவிகிதம் சரிந்துள்ள நிலையில், செப்டம்பர் காலாண்டிலும் நஷ்டத்தினையே கண்டது. இந்த நிலையில் அக்டோபர் மாத விற்பனை அதிகரிப்பானது மூன்றாவது காலாண்டில் சிறிது மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications