மாருதி சுசூகி இந்தியாவின் தலைவர் ஆர்சி பார்கவா, அதிகளவிலான வரியால் இந்தியாவில் அதிகளவிலான மக்கள் இருந்தாலும் , குறைந்த மக்களே கார் உரிமையாளர்களாக உள்ளனர் என கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பார்கவா, அரசின் கொள்கைகள் கார்களை மக்கள் பயனபடுத்தும் சொகுசு பொருட்களாகவே கருதுகின்றது. இதனால் வரி விகிதமும் அதிகமாக உள்ளது.
கார் துறை வளர்ச்சி
கார் மலிவு என்பது வருமானத்துடன் தொடர்புடைய அல்ல. இந்தியாவில் கார் துறையானது கடந்த 12 ஆண்டுகளில் 12%ல் இருந்து 3% ஆக குறைந்துள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அரசின் மோசமான கொள்கை என பார்கவா விமர்சனம் செய்துள்ளார்.
உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சியடைந்தால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது மிக வேகமாக இருக்கும் என்றும் பார்கவா தெரிவித்துள்ளார்.
சிறிய கார்கள் மீதான சுமை
நரேந்திர மோடி தலைமையிலான் அரசு வளர்ச்சியினை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், கார் துறையில் வளர்ச்சியானது பின்னடைவில் உள்ளது. பெரிய பெரிய கார்கள் மீதான சுமையை விட, சிறிய கார்கள் மீது மிக அதிகமான சுமை உள்ளது. இது சிறிய கார்களின் வளர்ச்சியினை பாதிக்கின்றது. தனிப்பட்ட முறையில் இது கார் துறைக்கோ அல்லது நாட்டுக்கோ நல்ல விஷயமே அல்ல என்றும் பார்கவா தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கணும்
ஆட்டோமொபைல் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். கார்களின் உரிமை எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது முழு பிரமிடும் மாறினால் தான், தன்னை தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
சிறிய கார்கள் பிரிவில் பெரியளவில் வளர்ச்சி
இந்தியாவில் சிறிய கார்கள் பிரிவில் பெரியளவில் வளர்ச்சி இல்லை. பெரிய கார்கள் மட்டுமே பெரும் வளர்ச்சியினையும் எட்டியுள்ளது. தற்போது ஆட்டோமொபைல் துறைக்கு 28% ஜிஎஸ்டி வரியானது விதிக்கப்பட்டு வருகின்றது. இது தவிர கார் மாடல்களை பொறுத்து 1 - 22% வரையில் செஸ் வரி விதிக்கப்படுகின்றது.
இறக்குமதி வரி அதிகம்
இதே முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்படுகிறது. 40,000 டாலர்களுக்கு கீழே உள்ள கார்களுக்கு 60%மும், இதற்கு மேலே விலையுள்ள கார்களுக்கு 100%மும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகிதம் மிகவும் அதிகமாகும்.
மின்சார வாகனங்களுக்கு வரி
மின்சார வாகனங்களுக்கு 5% ஆக வரி உள்ளது. ஆக சிறிய மின்சார காராக இருந்தாலும் சரி., பெரிய மின்சார வாகனமாக இருந்தாலும் சரி, அங்கு வரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஏற்கனவே அங்கு ஒரே மாதிரியான வரி விகிதம் என்பது இருந்து வருகின்றது.
தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் வரி விதிப்பு என்பது அதிகமாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக தொடர்ந்து வளர்ச்சி விகிதத்தினை பாதித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
SUV ரக கார்கள்
SUV கார்களுக்கான வரி விகிதம் குறித்தான கேள்விக்கு, 4 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்போது அவைகளுக்கு 22% செஸ் வரி விதிக்கப்பட வேண்டும். ஆனால் அவற்றினை 50%-க்குள் வைக்கப்பட்டுள்ளது. 50% வரி விதிப்பால் ஆட்டோமொபைல் துறையானது பெரியளவில் வளர்ச்சி அடையாது. உலகின் எங்கும் 50% வரி விதிப்புடன் ஆட்டோமொபைல் துறையானது வளர்ச்சி கண்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்டை நாடுகளில் வளர்ச்சி
தனி நபர் வருமானம் மிக அதிகமாக இருக்கும் ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கார்களுக்கான வரி மிக அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். யாரேனும் அதனை பற்றி சிந்திக்க வேண்டும். சராசரி விகிதத்தினை விட அதிக வரி விதிகப்பட வேண்டும் என்ற விஷயத்தை நாங்கள் ஏதோ ஒரு வகையில் எதிர்கொள்கிறோம்.
பல நிறுவனங்கள் வெளியேற்றம்
டெஸ்லா அதிக வரி காரணமாக இந்தியாவினை தவிர்த்தது. டொயோட்டாவும் தனது விரிவாக்கத்தினை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகளவில் பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சியினை மேம்படுத்த வரி குறைப்பு என்பது அவசியமான ஒன்று என்றும் பார்கவா கூறியுள்ளார்.
வரவிருக்கும் பட்ஜெட்டில் இத்தகையை கோரிக்கைகள் நிறைவேறுமா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதனை கருத்தில் கொள்ளுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications