மாருதி சுசூகி இந்தியா மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தில் தங்கள் சந்தைப் பங்கீட்டில் சரிவைக் கண்டு உள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் கியா இந்தியா ஆகியவை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த சந்தை மதிப்பீட்டில் வளர்ச்சியைக் கண்டு உள்ளது.
இந்தியாவில் கார் விற்பனை கடந்த ஒரு ஆண்டில் மிகவும் சிறப்பாக இருப்பது மட்டும் அல்லாலம் கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தை காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையும் கொண்டாட்டத்துடன் உள்ளது.
ஆனால் EV ஆதிக்கம், SUV ஆதிக்கம், மார்டன் கார்களுக்கான வரவேற்பு, ப்ரீமியம் கார்களின் விற்பனை அதிகரிப்பு, விலை உயர்ந்த கார்கள் மீதான மக்களின் மோகம் போன்ற காரணிகளால் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் மோட்டார் ஆகிய இரு நிறுவனங்களின் சந்தை பங்கீடு குறைந்துள்ளது.
மாருதி சுசூகி
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தொகுத்துள்ள ரீடைல் விற்பனைத் தரவுகளின்படி, மாருதி சுசூகி நிறுவனம் பிப்ரவரி 2022 இல் 1,09,611 கார்களை விற்பனை செய்யும் போது கடந்த மாதம் 1,18,892 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனாலும் ஆட்டோ மேஜர் சந்தை பங்கு பிப்ரவரியில் 42.36 சதவீதத்திலிருந்து 41.40 சதவீதமாக குறைந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்
இதேபோல், பிப்ரவரி 2022 இல் 14.95 சதவீதத்திலிருந்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சந்தைப் பங்கீடு கடந்த மாதம் 13.62 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் 38,688 கார்களை விற்பனை செய்த நிறுவனம் கடந்த மாதம் 39,106 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
மேலும் FADA அமைப்பின் தரவுகள் படி, டாடா மோட்டார்ஸ் ரீடைல் சந்தையில் பிப்ரவரி 2022ல் 34,055 கார்களை விற்பனை செய்த நிலையில் 2023 பிப்ரவரியில் 38,965 கார்களை விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் டாடா மோட்டார்ஸ்-ன் சந்தை பங்கீடு பிப்ரவரி 2022 இல் 13.16 சதவீதத்திலிருந்து கடந்த மாதம் 13.57 சதவீதமாக உயர்ந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா
2022 பிப்ரவரியில் 7.06 சதவீதமாக இருந்த மஹிந்திரா & மஹிந்திராவின் சந்தைப் பங்கு கடந்த மாதம் 10.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனம் சில்லறை விற்பனை சந்தையில் கடந்த ஆண்டு 18,264 கார்களை விற்பனை செய்த நிலையில் பிப்ரவரி 2023ல் 29,356 கார்களை விற்பனை செய்துள்ளது.
கியா இந்தியா
கியா இந்தியா பிப்ரவரி 2022 இல் 13,623 கார்கள் விற்பனையில் இருந்து 19,554 கார்களாக உயர்ந்ததுள்ளது. மேலும் சந்தை பங்கீட்டின் அளவு முந்தைய ஆண்டின் 5.27 சதவீதத்திலிருந்து 6.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
டோயோட்டா கிர்லோஸ்கர்
டோயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் குழுமம் ஆகியவையும் பிப்ரவரி மாதத்தில் சந்தைப் பங்கில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பைக் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் புதிய கார்களின் அறிமுகம் அதன் விற்பனையும் தான்.
ஹோண்டா
மேலும் ஹோண்டா, Renault, MG Motor India மற்றும் Nissan Motor India ஆகிய நிறுவனங்கள் பிப்ரவரி 2022 உடன் ஒப்பிடும் போது கடந்த மாதம் சந்தைப் பங்கீட்டு அளவில் சரிவைக் கண்டன. நாடு முழுவதும் உள்ள 1,434 RTOக்களில் 1,348 அலுவலகங்களில் பதிவுத் தரவைச் சேகரித்து FADA இந்த தரவுகளை வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications