புதுகார் வாங்கப்போகும் போது பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும், ஆனால் காருக்காக விலை குறித்துப் பேசும்போது அனைவரும் கேட்க வேண்டிய விஷயம் டிஸ்கவுன்ட், ஆஃபர் போன்றவை தான். அதிலும் குறிப்பாக இப்போது நீங்கள் கார் வாங்கத் திட்டமிட்டு இருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கும், இது தள்ளுபடிக்கான பொற்காலமாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது புது கார்களுக்கான தள்ளுபடிகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. புது கார்களின் விற்பனை குறைந்து வரும் நிலையில், கார் தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் அதிகப்படியான கார்களை இருப்பாக வைத்துள்ளனர், இந்த இருப்பை விற்பனை செய்ய தள்ளுபடிகளை அதிகரித்துள்ளனர். இந்த தள்ளுபடிகள் டிசம்பர் வரையிலான பண்டிகை காலம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் விற்பனையில் கிங் மேக்கராக இருக்கும் மாருதி சுசூகி முதல், ஹூண்டாய், டாட்டா மோட்டார்ஸ், ஸ்கோடா மற்றும் ஹோண்டா வரை அனைத்து நிறுவனங்களும் தங்களது பிரபலமான கார் மாடல்களுக்கும் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகின்றன.
உதாரணமாக மாருதியின் ப்ரெசா காருக்கு 25000 ரூபாயும், கிராண்ட் விட்டாரா-வுக்கு 128000 ரூபாயும், ஹூண்டாய் எக்ஸ்டர்-க்கு 40000 ரூபாயும், அல்கசார்-க்கு 90000 ரூபாயும், ஹோண்டா எலிவேட்-க்கு 80000 ரூபாயும், டாடா நெக்சான்-க்கு 16000 முதல் 100000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் தொழில்துறை நிர்வாகி கூறுகையில் "சந்தையில் நான் பார்த்திராத அளவுக்கு அதிகமான தள்ளுபடிகள் இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளன" என பெயர் வெளியிட விரும்பாத அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2020 நிதியாண்டிலிருந்து இதுவரை பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான தள்ளுபடிகள் இவை என்று பல மூத்த தொழில் நிர்வாகிகள் மற்றும் டீலர்கள் தெரிவித்தனர். 2020 காலகட்டத்தில் பாரத் ஸ்டேஜ் VI தரத்திற்கு கார்களை மாற்றுவதற்காக இருப்பில் இருந்த அனைத்து கார்களையும் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆட்டோமொபைல் சந்தை இந்த ஆண்டு எப்போதும் போல் நிலையாக 30 நாட்களுக்கு தேவையான 3 லட்சம் வாகனங்களை இருப்பில் கொண்டு வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால், கடந்த சில மாதங்களாக நிலவிய மந்தமான விற்பனை காரணமாகக் கூடுதலாக 1 லட்சம் கார்கள் இருப்பில் சேர்ந்தன.
இதனால் கார் தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் அதிகப்படியான தள்ளுபடிகளை கொடுத்து கார்களின் இருப்பை குறைக்க திட்டமிட்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக தள்ளுபடிகள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து வழங்கப்படும் சலுகைகள் 2020 நிதியாண்டின் சலுகைகளுக்கு இணையானது.
கடந்த நிதியாண்டில் நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 42.3 லட்சம் என்ற உச்சத்தை எட்டியது. மூன்று ஆண்டுகளாக வலுவான வளர்ச்சிக்குப் பிறகு, புதிய நிதியாண்டில் விற்பனை குறையத் தொடங்கியது.
மறுமுனையில் ஜூலை மாதத்தில், தொழிற்சாலைகளிலிருந்து டீலர்களுக்கான கார்களின் சப்ளை 2.5% குறைந்து 341,510 யூனிட்களாக குறைந்ததுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குத் தொடர்ந்து வரும் பண்டிகை காலத்தை நம்பியே கார் தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் கார் விற்பனையை அதிகரிக்க உள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications