இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி இதுவரையில் எந்தொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் செய்திடாத சாதனையை செய்து அசத்தியுள்ளது.
மாருதி சுசூகி காரில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் குறைவு, அதன் தரத்தில் பல கேள்விகள், Global NCAP ரேட்டிங்-ல் எப்போது குறைவான மதிப்பீடு, மிகவும் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட கார், மார்டன் கார்களுக்கு ஒப்பிட முடியாத அளவுக்கு மாருதி கார்கள் உள்ளது என பல விமர்சனங்களை முன்வைத்தாலும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை மாருதி சுசூகி மட்டுமே பெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக மாருதி சுசூகி நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக 1 லட்சம் கோடி ரூபாய் அதாவது 14.5 பில்லியன் டாலர் வருவாயை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதுவரையில் எந்தொரு இந்திய நிறுவனமும் தனது சொந்த தயாரிப்பை மட்டுமே வைத்து இந்த உச்சத்தை எட்டியது இல்லை. இது மட்டும் அல்லாமல் இந்த 1 லட்சம் கோடி ரூபாய் சாதனை மூலம் உலகளாவிய டாப் 30 நிறுவனகங்கள் பட்டியலில் மாருதி சுசூகி இணைந்துள்ளது.
இதற்கு முன்பு டாடா மோட்டார்ஸ் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிறுவனம் என்ற பெயரை பெற்று இருந்தாலும், டாடா மோட்டார்ஸ் வருவாயில் அதன் வெளிநாட்டு பிராண்டான ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகளும் அடக்கம் என்பது முழு உள்நாட்டு நிறுவனமாக இல்லை. ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகளும் உலகளவில் மிகப்பெரிய மதிப்பீடும் வர்த்தக சந்தையும் உள்ளது, இதனால் டாடா மோட்டார்ஸ் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது என்பது எளிதானது.

உலகின் டாப் 30 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் 17வது இடத்தில் உள்ளது, இதில் 3இல் 2 பங்கு வருவாய் ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகளில் இருந்து வருகிறது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது.
மாருதி சுசூகி 14.5 பில்லியன் டாலர் வருவாய் உடன் 28வது இடத்தில் உள்ளது. டாப் 3 இடத்தில் வோல்ஸ்வேகன் 293 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்திலும், டோயோட்டா 271 பில்லியன் டாலர் வருவாய் உடன் 2வது இடத்திலும், Stellantis 189 பில்லியன் டாலர் வருவாய் உடன் 3வது இடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications