சென்னை: மாருதி சுசூகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் எப்போதும் இல்லாத அளவாக 2 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2, 02,402 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 1,91,476 கார்களை விற்பனை செய்திருந்தது. அதுவே அதிகபட்சமாக இருந்த நிலையில் அந்த சாதனையை மாருதி சுசூகி நிறுவனம் நடப்பாண்டில் முறியடித்துள்ளது. பல்வேறு பண்டிகைகள் வந்ததே தங்களுடைய கார் விற்பனை அதிகரிக்க காரணம் என மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லட்சக்கணக்கான திருமணங்கள் நடைபெற இருப்பதால் நவம்பர் மாதத்திலும் தங்களுடைய கார் விற்பனை அமோகமாக இருக்கும் என மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு 2592000 நொடிகள் இருக்கும் வேளையில் ஒரு நொடிக்கு ஒரு கார் விற்பனை செய்துள்ளது மாருதி சுசூகி.
நவம்பர் மாதத்தில் மட்டும் 11 முதல் 12 முகூர்த்த தினங்கள் வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த திருமண நிகழ்வுகள் தங்களுடைய வாகன விற்பனைக்கு உதவிகரமாக இருக்கும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
மாருதி சுசூகி நிறுவனம் தங்களுடைய வாகன விற்பனை அதிகரித்திருப்பதால் ஏற்கனவே கணிப்பு வெளியிட்டபடி நடப்பு நிதி ஆண்டில் தங்களுடைய விற்பனை 4 முதல் 5 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. சில்லறை விற்பனையை பொருத்தவரை ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மொத்தமாக 4 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அக்டோபர் மாதத்தில் தான் அதிக அளவிலான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளன. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 96,648 கார்களை விற்பனை செய்திருப்பதாகவும் கடந்தாண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது 20% அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஆண்டை விட நான்கு சதவீதம் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 33,168 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் இது வெறும் 21,000 ஆக இருந்தது. உள்நாட்டில் வாகன விற்பனையில் தொடர்ந்து மாருதி சுசூகி நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்கள் விற்பனை கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications