சென்னை: இந்திய கார் விற்பனை சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி, தனது AGS (Auto Gear Shift) தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல்களின் விலையை ரூ.5000 வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தாலும், இந்த விலை குறைப்புக்கான இன்னும் ரீடைல் ஷோரூம்-களுக்கு தகவல் கிடைக்கப்பெறவில்லை. மாருதி சுசூகி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு அடுத்த வாரத்தில் ரீடைல் ஷோரூம்கள் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த கார்களுக்கு விலை குறைப்பு?: Alto K10, S-Presso, Celerio, Wagon-R, Swift, Dzire, Baleno, Fronx மற்றும் Ignis ஆகிய மாடல்களின் AGS வேரியென்ட்-களுக்கு இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், இந்த மாடல்களை வாங்க விரும்புவோருக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கும்.
AGS என்றால் என்ன?: AGS (Auto Gear Shift) என்பது கியர் மாற்றும் கிளட்ச் கட்டுப்பாட்டை எலக்ட்ரானிக் முறையில் செயல்படுத்தும் ஆட்டோமேட்டெட் தொழில்நுட்பம் ஆகும். கைகளால் இயக்கப்படும் கியர் (Manual Transmission) மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் (Automatic Transmission) ஆகிய இரண்டின் நன்மைகளையும் இணைத்த தொழில்நுட்பம் இது.
எப்போது அமலுக்கு வருகிறது?: ஜூன் 1, 2024 முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. அதாவது, இன்றே ஷோரூம்களில் குறைந்த விலையில் AGS கார் மாடல்களை வாங்க முடியும்.
விலை குறைப்புக்கான காரணம் என்ன?: மாருதி சுசூகி நிறுவனம் விலை குறைப்புக்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும், போட்டி அதிகமுள்ள இந்திய வாகன சந்தையில், தனது AGS கார் மாடல்களின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் இந்த விலை குறைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கை, ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம், சாமானிய மக்களும் தற்போது எளிதாக AGS கார் மாடல்களை வாங்க முடியும்.
இந்த 5000 ரூபாய் தள்ளுபடி என்பது சந்தையில் போட்டி தன்மையை சற்று மாருதி சுசூகி பக்கம் திருப்பும். மேலும் Alto K10, S-Presso, Celerio, Wagon-R, Swift, Dzire, Baleno, Fronx மற்றும் Ignis ஆகிய மாடல்களின் AGS வேரியென்ட் அனைத்தும் பட்ஜெட் கார்கள், இதில் சிறிய அளவிலான விலை குறைப்பும் பெரிய வர்த்தகத்தை பெற வழிவகுக்கும்.
விற்பனை மந்தம்: கடந்த மூன்று ஆண்டுகளாக கார் விற்பனை சூடுபிடித்திருந்த வேளையில், இந்திய சந்தையில் தற்போது தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, மே மாத இறுதிக்குள் 4 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் கையிருப்பில் இருக்கும் என கார் உற்பத்தியாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த 4 லட்சம் வாகனங்களின் மதிப்பு ரூ.44,000 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது, தற்போது சந்தையில் இருக்கும் கார்களின் சராசரி மதிப்பு 11 லட்சமாகும். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்பு, வர்த்தக சந்தை சீரான பின்பு தான் இந்த கார்களின் உண்மையான நிலை தெரியவரும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications