டெல்லி: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் திடீரென தங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உள்ளீட்டு செலவினம் மற்றும் செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்திருப்பதாலேயே கார்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுசூகி நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.

செலவினங்களை கட்டுப்படுத்தி வாடிக்கையாளர்கள் மீது திணிக்க கூடாது என்று முயற்சி செய்ததாகவும் இருந்தாலும் சில செலவினங்கள் அதிகரித்ததால் அதனை வாடிக்கையாளர் மீது சுமத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகபட்ச மூலப் பொருட்கள் கட்டணம், தளவாடச் செலவினங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் தான் மாருதி சுசூகி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாருதி சுசூகி கடந்த டிசம்பர் மாதம் தான் ஜனவரியிலிருந்து தங்கள் நிறுவன கார்களின் விலையை 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதன்படி பார்க்கும்போது ஜனவரி மாதம் 4% ஏப்ரல் மாதம் 4% என நான்கு மாதங்களில் 8% வரை கார்களின் விலையை மாருதி சுசூகி நிறுவனம் உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில வகை மாடல்களுக்கான விலையை மட்டும் பிப்ரவரி மாதத்தில் 1500 ரூபாயிலிருந்து 32,500 வரை மாருதி சுசூகி உயர்த்தியது. இப்படி அடுத்தடுத்த கார்களின் விலை உயர்த்துவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி சுசூகி தங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் அதன் பங்கு மதிப்பு 2 சதவீதம் வரை உயர்ந்தது. மார்ச் 17ஆம் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையில் மாருதி சுசூகியின் ஒரு பங்கு மதிப்பு 11,548 ரூபாய் என வர்த்தகமானது.
மாருதி சுசூகி நிறுவனம் இந்திய வாகன விற்பனை சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு வாகன விற்பனையில் 41.6% பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஹுண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. உலகிலேயே மூன்றாவது பெரிய வாகன விற்பனை நாடாக இந்தியா இருக்கிறது, வாகன உற்பத்தியில் நான்காவது பெரிய நாடாக இந்தியா செயல்படுகிறது. அடுத்தடுத்து கார்களின் விலையை உயர்த்தினாலும் இந்தியர்களுக்கு பிடித்த நிறுவனமாக மாருதி சுசூகி தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications