கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது கார்களுக்கு கிட்டத்தட்ட ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. புதிய நிதியாண்டு தொடக்கத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக பிரபலமான மாடலான பலேனோ, பிரான்க்ஸ் , ஜிம்னி உள்ளிட்ட கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம் என மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றின் வடிவத்தில் இதனை பெற முடியும்.

வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள மாருதி சுசுகி டீலர்களை அணுகி இந்த தள்ளுபடிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis): இந்த வகை காருக்கு ரூ.58,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ.40,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.15,000 கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஆகிய இரண்டு வகைகளுக்கு ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
மாருது சுசுகி பலேனோ(Maruti Suzuki Baleno): மாருதி நிறுவன கார்களில் தற்போது அதிகமாக விற்பனையாகும் கார் இது. இந்த மாடலுக்கு ரூ.35,000 கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000 மற்றும் பெட்ரோல் டிரிம்களுக்கு ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதில் சிஎன்ஜி மாடலுக்கு கேஷ் டிஸ்கவுண்ட் ரூ.15,000 மட்டுமே கிடைக்கும்.
மாருதி சுசுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz): இந்த மாடலுக்கு ரூ.53,000 வரை தள்ளுபடி பெற முடியும், ஸ்டிக்கர் விலையில் ரூ,25,000 தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.25,000, கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.3,000 கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி கிராண்ட் விதாரா (Maruti Suzuki Grand Vitara): இந்த மாடல் கார்களில் மைல்ட் ஹைபிரிட் கார்களுக்கு மாருதி நிறுவனம் சுமார் 58,000 ரூபாய் வரை தள்ளுபடி தருகிறது. இதில் கேஷ் டிஸ்கவுண்ட் ரூ.25,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.30,000, கார்ப்பரேட் சலுகை ரூ.3,000 அடங்கும். ஸ்டிராங் ஹைபிரிட் வகை கார்களுக்கு ரூ.84,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதில் கேஷ் டிஸ்கவுண்ட் ரூ.30,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.50,000 மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.4,000 அடங்கும்.
மாருது சுசுகி பிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx ): இதில் டர்போ - பெட்ரோல் வகை கார்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ், தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகை என ரூ.68,000 வரை தள்ளுபடி பெறலாம். ஆனால் வழக்கமாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளுக்கு தள்ளுபடி குறைவு தான்.
மாருதி சுசுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny): நெக்ஸா வகையை சேர்ந்த ஜிம்னி வகை கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஆல்பா டிரிம் , ஸெடா டிரிம் கார்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் என மாருதி சுசுகி அறிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications