மும்பை: மாருதி சுசூகி நிறுவனம் 4 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மூலதனத்தை எட்டிய 19ஆவது இந்திய நிறுவனம் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 4 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கடந்த நிறுவனமாக மாறியது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகள் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தையில் மார்ச் 27ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ.12,725 என்ற உச்சத்தை எட்டியது.
இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஆர்ஐஎல்,டிசிஎஸ், எச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல் எஸ்பிஐ, எல்ஐசி, ஹெச்யுஎல், ஐடிசி, எல்&டி, பஜாஜ் பைனான்ஸ், அதானி எனர்ஜி, அதானி கிரீன், ஹெச்சிஎல், அதானி எண்டர்பிரைசஸ், கோடக் மகேந்திரா மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களை அடுத்து மாருதி சுசூகி இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தை பொறுத்தவரை அதன் பிரீமியம் ரக கார்கள் விற்பனை அதிகரித்தது நிறுவனத்தின் சந்தை மூலதனம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. பிரீமியம் அல்லாத கார்களின் விற்பனை என்பது மந்தமாகவே இருக்கிறது. மாருதி சுசூகி நிறுவனத்தின் இயர் ஆன் இயர் லாபம் என்பது 33 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது .
சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய வாகனங்களான நியூ பிரெஸ்ஸா, கிராண்ட் வித்தாரா மற்றும் பிரான்க்ஸ் ஆகியவை விற்பனை வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன.
அண்மைக்காலமாக உலகம் முழுவதும் மின்சார கார்களுக்கான தேவை என்பது அதிகரித்திருந்தது. ஆனால் மின்சார வாகனங்களின் விலை அதிகம் மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை ஆகியவை காரணமாக தற்போது மக்கள் ஹைபிரிட் ரக கார்களின் பக்கம் திரும்பி உள்ளனர். இதன் காரணமாகவும் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை உயர்ந்துள்ளது.
மாருதி நிறுவனம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பல்வேறு ஹைபிரிட் மாடல் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி பாசிடிவ்வாக இருக்கிறது என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு மதிப்புக்கான இலக்கினை ரூ.13,000 என நிர்ணயத்துள்ள ஜே எம் பைனான்சியல் தரகு நிறுவனம், பங்குகளை வாங்கலாம் என்ற நிலைப்பாட்டில் வைத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications