இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, இத்தனை வருடங்களாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிடாமல் இருந்த காரணத்தால் சக போட்டி நிறுவனங்கள் போட்டிப்போட்டு சார்ஜிங் ஸ்டேஷன்களை நாடு முழுவதும் அமைக்கப்படும் போது ஜாலியாக இருந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் டாடா முதல் ஹூண்டாய் வரை, இந்தியன் ஆயில் முதல் ஜியோ BP வரை, தனியார் எலக்ட்ரிக் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் நாட்டின் பெரும்பாலான இடத்தில் சார்ஜிங் கட்டமைப்பை போதுமான அளவுக்கு அமைத்துள்ளது. இதனால் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோருக்கு ரேஞ்ச் அச்சம் குறைந்து மக்கள் மத்தியில் EV மீதான மோகம், ஆர்வமாக மாறியுள்ளது.

இந்த மாற்றத்தைச் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள மாருதி சுசூகி நிறுவனம் 2025 ஜனவரி மாதம் தனது முதல் எலக்ட்ரிக் காரான மிட்-சைஸ் SUV கான்செப்ட் eVX-ஐ புதிய பெயரில் அறிமுகம் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த கார்களை மாருதி சசூகி வாடிக்கையாளர்கள் எளிதாகவும் சிறப்பாகவும் பயன்படுத்த சுமார் 25,000 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்தியாவில் 2,300 நகரங்களில் இருக்கும் 5,100-க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
இதோடு அல்லாமல் மாருதி சசூகி எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் (OMCs) மற்றும் மின்சார நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சார்ஜிங் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பு, நாட்டின் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி வேகமாக மக்கள் தினசரி பயன்படுத்தும் வாகனமாக மாறும்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை நாட்டில் 81,000 க்கும் மேற்பட்ட ரீடைல் விற்பனை நிலையங்களை இணைந்து நடத்தி வருகிறது. இந்த 3 நிறுவனங்கள் மட்டுமே சுமார் 90% ரீடைல் பெட்ரோல் பங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இத்தகைய கூட்டணி உடன் மாருதி சுசூகி கூட்டணி வைக்கும் போதும் பெரும் மாற்றமாக இருக்கும்.
மாருதி சுசூகி eVX கார் 20-25 லட்சத்துக்கு இடையிலான விலையில் நிர்ணயிக்கப்படும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் 3,000 கார்தளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த எலக்ட்ரிக் SUV கார், அதன் குஜராத் ஆலையில் தயாரிக்கப்பட்டு, பிரீமியம் நெக்ஸா கடையின் மூலம் விற்பனை செய்யப்படும். இதோடு அடுத்த 6-7 ஆண்டுகளில் மாருதி சுமார் 6 எலக்ட்ரிக் வாகனங்களில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications