இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி ஜனவரி முதல் தனது கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் சுமார் 50 சதவீத சந்தையை வைத்திருக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் விலை உயர்வு குறித்த முடிவு பிற நிறுவனங்களைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து இந்த விழாக்கால சிறப்பு விற்பனை மூலம் மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது மாருதி சுசூகி நிறுவனத்தின் விலை உயர்வு வர்த்தகத்தைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு
கடந்த ஒரு வருடமாக மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் தயாரிப்பில் உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் கார்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மாருதி சுசூகி பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ்
இதேபோன்று வையிட் கூட்ஸ் தயாரிப்பில் இன்புட் காஸ்ட் அதாவது உற்பத்தி பொருட்களின் மற்றும் அதைச் சார்ந்த செலவுகள் 15 முதல் 40 சதவீதம் வரையில் அதிகரித்துள்ள காரணத்தால் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், மைக்ரோ ஓவன் ஆகிய பொருட்களின் ரீடைல் சந்தை விலை 20 சதவீதம் வரையில் உயரும் என சந்தை கணிப்புகள் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்கள்
உற்பத்தி செலவுகளில் ஏற்பட்டும் இந்த உயர்வை நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உற்பத்தி செலவுகளில் ஏற்படும் கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் மீது செலுத்தும் வகையில் கார் விலை உயர்வின் மூலம் சரி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வருகிற ஜனவரி 2021 முதல் கார்களின் விலையை உயர்த்தப்படும்.
மேலும் காரிகளின் மாடல் மற்றும் வகைகளுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும்.
உள்நாட்டு விற்பனையில் சரிவு
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுசூகி இந்தியாவில் 1,39,133 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2020 நவம்பர் மாதம் 1,35,775 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அளவை விடவும் 2.4 சதவீதம் குறைவாகும்.
ஏற்றுமதி அளவீடுகள்
ஆனால் இதே காலத்தில் ஏற்றுமதி அளவீடுகளைச் சேர்த்துக் கணக்கிடும் போது கடந்த வருடம் 1,50,630 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருடம் 1,53,223 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தகத்தையும் சேர்க்கும் போது இந்நிறுவனத்தின் வர்த்தகம் நவம்பர் மாதத்தில் 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications