தீபாவளி, ஆயுத பூஜை என விழாக்காலம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி மிகப் பெரிய சலுகைகளை அறிவித்துள்ளது.
எஸ்-பிரஸ்ஸோ, டிசைர், செல்லிரியோ, ஸ்பிப்ட், ஆல்டோ, வேகனார் என பல்வேறு பிராண்டட் கார்களுக்கு ஆஃபர்கள் மாருதி சுசூகி அறிவித்துள்ளது.
அதிகபட்சம் 56,000 ரூபாய் வரை ஆஃபர் அறிவித்துள்ளதால், இது கார் வாங்க சரியான நேரமாக உள்ளது,
மாருதி சுசூகி எஸ் பிரஸ்ஸோ
மாருதி சுசூகி எஸ் பிரஸ்ஸோ மேனுவல் வேரியண்டில் அதிகபட்சமாக 56,000 ரூபாய் வரை தள்ளுபடியைப் அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் 15,000 ரூபாய், ரொக்க தள்ளுபடி 35,000 ரூபாய், மற்றும் நிறுவன தள்ளுபடிகள் 6,000 ரூபாய். எஸ் பிரஸ்ஸோ ஏஎம்டி காருக்குரூ.46,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி டிசையர்
மருதி சுசூகி டிசையர் வாங்க 52,000 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 35,000 ரூபாய் தள்ளுபடி, 7,000 ரூபாய் கார்ப்ரேட் தள்ளுபடி, எக்ஸ்சேஞ் போனஸ் 10,000 ரூபாய் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி செலிரியோ
மாருதி சுசூகி செலிரியோவின் மேனுவல் பதிப்புகளுக்கு மொத்தம் 51,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 30,000 ரூபாய் ரொக்கத் தள்ளுபடி, 6,000 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் 15,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் ரூ. 51,000 தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக, செலிரியோ சிஎன்ஜி வாங்க 10,000 ரூபாய் மொத்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட்
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஏஎம்டி கார் வாங்க 47,000 ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேனுவல் கார் வாங்க 30 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
மாருதி சுசூகி ஆல்டோ கே10
மாருதி சுசூகி ஆல்டோ கே10 ஹாட்ச் பேக் கார் வாங்க 39,000 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் 15,000 ரூபாய். ரொக்க தள்ளுபடி 17,000 ரூபாய். கார்ப்ரேட் தள்ளுபடி 7000 ரூபாய்.
மாருதி சுசூகி ஆல்டோ 800
மாருதி சுசூகி ஆல்டோ 800 வாங்க 36,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 11 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 36 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசூகி வேகன் ஆர்
மாருதி சுசூகி வேகன் ஆர் காருக்கு தள்ளுபடி 15,000 ரூபாய், சிஎன்ஜி காருக்கு கூடுதலாக 5000 ரூபாய் என மொத்தமாக 31,000 ரூபாய் வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
மாருதி சுசூகி வழங்கும் இந்த சிறப்பு தள்ளுபடி விழக் கால மாதமான அக்டோபருக்கு மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications