இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, பல தசாப்தங்களாக ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வெற்றி பெற்றது. அதுதான் உள்ளூர்மயமாக்கல். மாருதி சுசூகி தயாரிக்கும் ஒவ்வொரு காரிலும் சுமார் 95 சதவீத பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்து வந்தது. இதைவிட முக்கியமாக இந்த உதிரிபாகங்களும் மாருதி சுசூகி நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளுக்கு அருகில் 100 கிலோமீட்டர் தூரத்திற்குள் 78 சதவீத சப்ளையர்கள் இருந்தனர்.
இந்த கட்டமைப்பு மூலம் மாருதி சுசூகி-க்கு ஆயிரக்கணக்கான சிறிய உற்பத்தியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, மிகக் குறைந்த விலையில் உதிரிபாகங்களை வழங்கினர். இதனால் மாருதி சுசூகி எந்தக் காரை விற்பனை செய்தாலும் பெரும் லாபத்துடன் விற்க முடிந்தது. ஆனால், இப்போது அறிமுகமாகியுள்ள eVitara என்ற மின்சார கார் இதற்கு முற்றிலும் மாறுப்பட்டது.

மாருதி சுசூகியின் பலம்
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் (ICE கார்கள்) இன்ஜின், கியர்பாக்ஸ், எக்ஸாஸ்ட் உள்ளிட்ட பல நூறு பாகங்கள் இருக்கும். இவை அனைத்தையும் இந்தியாவில் உள்ள சப்ளையர்களிடமிருந்து பெற்று, விலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மாருதி. ஒரு பாகம்கூட வெளிநாட்டிலிருந்து வராததால், விலை உயர்வு அல்லது விநியோகப் பிரச்சினைகள் ஏற்படவில்லை.
இதன் மூலம் இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்பகுதி மக்களுக்கு மலிவான விலையில் நல்ல கார்களை அளித்து, சந்தையை பெரிய அளவில் கைப்பற்றியது. ஆனால், மின்சார வாகனங்களில் இந்த நிலைமை மாறிவிடுகிறது.
மின்சார வாகனங்கள்
மின்சார கார்களில் இன்ஜின், கியர்பாக்ஸ், எக்ஸாஸ்ட் போன்ற நகரும் பாகங்கள் மிகக் குறைவு. அதற்கு பதிலாக ஒரே ஒரு பாகம் முழு காரின் விலையை தீர்மானிக்கிறது - அதுதான் பேட்டரி.
இந்தப் பேட்டரி மட்டும் காரின் மொத்த விலையில் 30 முதல் 40 சதவீதம் வரை ஆகிறது. மற்ற பாகங்களைப் போல இதன் விலையை மாருதி கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், பழைய உள்ளூர் சப்ளை மாடல் முழுவதுமாக இழந்துவிட்டது.
eVitara-வின் பேட்டரி
eVitara காரின் விலை சுமார் 16 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. இதில் பேட்டரி மட்டும் 5 லட்சம் முதல் 5.5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்தப் பேட்டரி சீனாவின் BYD நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரே ஒரு வெளிநாட்டு சப்ளையரிடமிருந்து இவ்வளவு பெரிய தொகை செலவாகும்போது, மாருதியால் விலையைக் குறைக்க முடியாது, மலிவான விலையிலும் கார்களை விற்க முடியாது.
பெட்ரோல் கார்களில் கூட எந்த ஒரு பாகமும் இவ்வளவு பெரிய விலை பங்கீட்டை கொண்டது இல்லை. இதனால் ஈவி துறையில் மாருதி சுசூகி மிகவும் பலவீனமான நிலையிலேயே நுழைகிறது.
சிக்கிக்கொண்ட மாருதி சுசூகி
இதன் காரணமாகவே மின்சார வாகனச் சந்தையில் தாமதமாக நுழைந்தது மாருதி, ஈவி துறையில் சந்தைப் பங்கைப் பெற வேண்டும் என்பதற்காக விலையை மிகவும் குறைவாக வைத்துள்ளது மாருதி. ஆனால், இந்த விலையில் கார் விற்றாலும், பேட்டரி செலவு காரணமாக இலாபம் கிடைக்காது. இந்த நிலை நீண்டகாலம் தொடரும் என்று தெரிகிறது.
மாருதி இதுவரை எந்தக் காரையும் லாபமின்றி விற்றதில்லை. ஆனால் eVitara இந்த வரலாற்றை மாற்றியுள்ளது. இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் சாதாரண மக்களுக்கு இந்தக் கார் மலிவாக இருந்தாலும், நிறுவனத்துக்கு இது பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனல் மாருதி சுசூகியின் லாப அளவுகள் eVitara மூலம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என கணிக்கப்படுவதால் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
சீனா வேலையை காட்டினால்..?!
சீனா ஏற்கெனவே பேட்டரி விநியோகத்தை சில சமயங்களில் கட்டுப்படுத்தியுள்ளது. இது நடந்தால், பேட்டரி விலை உயரும். அதனால் மின்சார கார்களின் விலையும் அதிகரிக்கும். இந்தியாவில் எந்த நிறுவனமும் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியாது.
இதேபோல் பேட்டரி விலையும் மாருதி சுசூகி கட்டுப்பாட்டில் இல்லை, இதேபோல் சப்ளையர்களையும் உடனடியாக மாற்ற முடியாது. இப்படி அனைத்து வழிகளிலும் மாருதி சுசூகி சிக்கிக்கொண்டு தான் ஈவி துறையில் இறங்கியுள்ளது.
உள்நாட்டு பேட்டரி உற்பத்தி
இந்திய நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா ஏற்கெனவே மின்சார வாகன உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் வேளையில். பேட்டரி உற்பத்தியையும் உள்ளூரில் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாருதி எதிர்காலத்தில் பேட்டரியை இந்தியாவிலேயே தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியுமா என்பது பெரிய கேள்வி.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications