சென்னை: இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும் அடுத்தடுத்த புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம் தங்களுடைய நெக்ஸ்ட் ஜெனரேஷன் டிசையர் (Dzire) காரை வரும் நவம்பர் 11ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்தியாவில் சிறிய எஸ்யூவி ( SUV) கார்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் compact sedan பிரிவில் மேம்படுத்தப்பட்ட டிசையர் கார்களை அறிமுகம் செய்கிறது. இது புதிய யுக்தியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தான் மாருதி சுசுகி நிறுவனம் டிசையர் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அப்போது முதல் தற்போது வரை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த செடான் வகை காராக டிசையர் செயல்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 27 லட்சம் வாடிக்கையாளர்கள் இதற்கு இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரியான பார்த்தோ பானர்ஜி தெரிவிக்கிறார். தற்போது நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு டிசையர் கார் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
புதிதாக சந்தைக்கு விற்பனைக்கு வர இருக்கும் டிசையர் கார் 1.2 லிட்டர் ஸீ சீரியஸ் இன்ஜினை கொண்டிருக்கிறது. மேலும் three-cylinder configuration கொண்டிருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக ஹோண்டா நிறுவனம் தங்களுடைய Amaze காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைய இளைய இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான காராக இது மாறும் என ஹோண்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேபோல ஐரோப்பாவை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா தங்களுடைய compact SUV Kylaq காரை அறிமுகம் செய்ய இருக்கிறது . அடுத்த ஆண்டு முதல் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் 1.0 லிட்டர் இன்ஜின் மற்றும் three-cylinder turbo-petrol இன்ஜினுடன் இது விற்பனைக்கு வர இருக்கிறது .
அடுத்ததாக மின்சார வாகன பிரிவில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் XEV மற்றும் BE என்ற இரண்டு பிராண்டுகளை அறிமுகம் செய்ய இருக்கிறது. சென்னையில் நவம்பர் 26 ஆம் தேதி இந்த இரண்டு கார் பிராண்டுகளும் அவற்றின் கீழ் XEV 9e மற்றும் BE 6e மாடல் கார்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மின்சார கார்களிலேயே ஆடம்பர கார்களாக இவை இருக்கும் என மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications