லாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..!

லாக்டவுன் தளர்வினால் முன்னணி வாகன நிறுவனங்களின் விற்பனை படுஜோராக அதிகரித்துள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வாகன விற்பனை பலத்த அடி வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜூன் காலாண்டில் 82% விற்பனை வீழ்ச்சியினை கண்டு, வெறும் 23,845 வாகனங்களை மட்டும் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் தான் என்றும் கூறியுள்ளது. இதே கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1,31,879 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார் பாதிப்பு

டாடா மோட்டார் பாதிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனை மற்றும் உற்பத்தி இரண்டுமே கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது இந்த நிறுவனம். இது வர்த்தக மற்றும் பயணிகள் வாகன விற்பனையானது லாக்டவுனினால் குறைந்துள்ளதாகவும், தேவையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வர்த்தக வாகன விற்பனை சரிவு

வர்த்தக வாகன விற்பனை சரிவு

டாடா மோட்டார்ஸிக்கு முக்கிய வணிகமாக இருக்கும் வர்த்தக வாகன விற்பனையானது, ஜூன் காலாண்டில் 90 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 10,476 வாகனங்களாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொழில்துறை வளர்ச்சி முடக்கம் மற்றும் பொருளாதார முடக்கத்தினால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது வர்த்தக வாகன தேவையையும் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சிறிய கார்களுக்கு தேவை அதிகரிப்பு

சிறிய கார்களுக்கு தேவை அதிகரிப்பு

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக மாருதி சுசூகியும், ஹூண்டாய் மோட்டார்ஸின் விற்பனை, கடந்த மாதத்தோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் வாகன விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கார்களுக்குக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், இது நுகர்வோருக்கு கார் வாங்க சரியான நேரம் என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் பொதுபோக்குவரத்தினை தவிர்க்க சிறிய ரக கார்களையும், காம்பாக்ட் ரக கார்களையும் வாங்கி வருவதாக அறிக்கைகள் கூறப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி & ஹூண்டாய் விற்பனை

மாருதி சுசூகி & ஹூண்டாய் விற்பனை

மாருதி சுசூகி இந்தியா இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாகும். இது கடந்த ஜூன் மாதத்தில் 51.274 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே மற்றொரு முன்னணி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் 21,320 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மகேந்திரா & மகேந்திரா விற்பனை

மகேந்திரா & மகேந்திரா விற்பனை

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிராக்டர் வாகன விற்பனையானது கடந்த ஜூன் மாதத்தில் 10% விற்பனை அதிகரித்து 36,544 வாகனங்களானது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதம் 33,094 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+