இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி பணவீக்கம் மற்றும் அதிகரித்துள்ள உற்பத்தி பொருட்களின் விலைகளால் ஜனவரி 2024 முதல் தன்னுடைய அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக செலவைக் குறைப்பதற்கும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்கும் அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதே வேளையில், வர்த்தக சந்தையின் தாக்கத்தால் பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு அதன் லாப அளவீடுகளை கடுமையாக பாதிக்கும் காரணத்தாலும், சந்தையில் இருக்கும் போட்டிக்கு ஏற்றவாறு விலையை கொண்டு வர முடியாத காரணத்தால் விலை சுமையை வாடிக்கையாளர்கள் தலையில் விதிப்பதை தவிர வேறு வழியே இல்லாத நிலையில் ஜனவரி மாதம் கார்களின் விலையை உயர்த்த உள்ளது.
எந்த கார் எவ்வளவு விலை உயரும் என்ற கணக்கீட்டையோ அல்லது கணிப்பையோ வெளியிடவில்லை. ஆனால் விலை உயர்வை உறுதி செய்துள்ளது மாருதி சுசூகி. அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தனது உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் மத்தியில் லாப அளவீட்டை கடைப்பிடிக்கும்.
இதில் விலை ஏற்ற இறக்கத்தை சமாளிக்க 2-5 சதவீதம் Buffer அளவீடு இருக்கும், இது உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் போது மறையும் இந்த சூழ்நிலையை மறைக்க தான் விலை உயர்த்தப்படுகிறது. இந்த நிலையை தான் தற்போது மாருதி சுசூகி இழந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகப்படியான கார்களை விற்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பட்டியலில் மாருதி சுசூகி தான் முதல் இடத்தில் உள்ளது. பட்ஜெட் விலையில் கார்களை வாங்க வேண்டும் என திட்டமிடும் அனைத்து இந்திய மக்களுக்கு மாருதி சுசூகி தான் முக்கிய டார்கெட் ஆக உள்ளது.
இதனால் இந்த விலை உயர்வு புதிதாக கார் வாங்குவோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் ஆடி கார் நிறுவனம் ஜனவரி மாதம் முதல் தனது கார் விலையை 2 சதவீதம் வரையில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications