நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமான நிலையில் இருந்து வரும் நிலையில், கடந்த மே1ல் இருந்து மே 9ம் தேதி வரையில் உற்பத்தியினை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
தற்போதைய நிலையில் கொரோனாவினால் நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. இது வரவிருக்கும் வாரங்களில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதியின்மையால், இந்தியா திணறி வருகின்றது.
மாருதி சுசூகியின் திட்டம்
இதற்கிடையில் பல கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தியினை செய்து வருகின்றன. தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்தும் வருகின்றன. அரசும் பல இடங்களில் புதியதாக ஆக்சிஜன் உற்பத்தியினை தொடங்க அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, அதன் ஹரியானா ஆலையில் வாகன உற்பத்தியினை நிறுத்தியது,.
ஆக்சிஜன் உற்பத்தி
மேலும் வாகன உற்பத்தியை நிறுத்திய கையோடு, ஆக்சிஜன் உற்பத்தியினை செய்யப் போவதாக அப்போது அறிவித்தது. வழக்கமாக ஆலை பராமரிப்புக்காக ஜூன் மாதத்தில் திட்டமிடப்படும். ஆனால் தற்போது இந்தியாவில் மக்கள் ஆக்சிஜனுக்காக தள்ளாடி வரும் நிலையில், அதனை முன் கூட்டியே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எப்போது தொடக்கம்
இதனால் மாருதியின் அனைத்து ஆலைகளும் மே 1 முதல் மே 9 வரை அதன் ஆலை பராமரிப்புக்காக பணி நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்தது. இந்த காலகட்டத்தில் அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவதாகவும் அறிவித்தது. கார் உற்பத்தியின் போது, மாருதி சுசூகி அதன் தொழிற்சாலைகளில் சிறிய அளவிலான ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உயிரை காப்பாற்ற பயன்படும்
ஆக நிலவி வரும் நெருக்கடியான நிலையில், கிடைக்கக்கூடிய குறைந்த அளவிலான ஆக்சிஜனும், உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என மாருதி தெரிவித்துள்ளது. இதே போல சுசூகி மோட்டார் குஜராத் நிறுவனமும் இதே முடிவை எடுத்துள்ளதாக அப்போது கூறப்பட்டது. இதற்கிடையில் தற்போது மே 16 வரை ஆலை பராமரிப்புக்காக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications