இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் தாய் நிறுவனமான ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் அதன் முதல் உற்பத்தி பேட்டரி எலக்ட்ரிக் வாகன மாடல் இ விட்டாராவை (e VITARA) இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நேற்று அறிமுகப்படுத்தியது. கடந்த ஜனவரி 2023 இல் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ மற்றும் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடல் ஆனது, eVX என்ற கான்செப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்த இ விட்டாரா மாடல் ஆனது வரும் 2025 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் குஜராத்தில் உற்பத்தி தொடங்கப்படும் எனவும், இதன் விற்பனை 2025 ஆம் ஆண்டின் பாதியில் ஐரோப்பா, இந்தியா மற்றும் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ விட்டாரா என்பது மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு எளிதாக பயன்படுத்தும் வகையில் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மாடலை நிறுவனம் அடுத்தடுத்த சோதனைகளுக்கு உட்படுத்தி, பிழைதிருத்தம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கார்பன்-நியூட்ரல் சுற்றுச்சூழலை உருவாக்கவும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்றவாறு பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் CNG வாகனங்கள் உள்ளிட்ட பல விருப்பங்களை வழங்கும் என்று சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் பிரதிநிதி இயக்குநரும் தலைவருமான டோசிகிரோ சுசுகி (Toshihiro Suzuki) கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2030 நிதியாண்டிற்கான அவர்களின் வளர்ச்சி உத்தியில், SMC ஐரோப்பா, இந்தியா மற்றும் ஜப்பானை முக்கிய வணிகப் பகுதிகளாக நிலைநிறுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பா மற்றும் ஜப்பானில், நாங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் பெரிய அளவிலான ஒட்டுமொத்த சந்தையை நிறுவுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அனைத்துப் பகுதிகளிலும் கார்பன் நடுநிலைமையை அடைவதே எங்கள் மூலோபாயத்தின் மற்றொரு பகுதி எனவும், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பிற பகுதிகளுக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். தற்போது அனைத்து சந்தைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இத்தகைய முன்னேற்றத்தின் மூலம், 2030 நிதியாண்டில் 7 டிரில்லியன் யென் விற்பனையை இலக்காகக் கொண்டுள்ளோம் எனவும், மேலும் நிலையான வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
இ விட்டாரா ஒற்றை, இரட்டை மோட்டார் அமைப்புகளை கொண்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அடிப்படை-ஸ்பெக் டிரிம் 49 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் பெரிய 61 kWh பேட்டரி பேக் கிடைக்கும். எனவே, ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 550 கிமீ தூரம் செல்லும் என கூறப்படுகிறது.
இ விட்டாரவின் முக்கிய சிறப்பம்சங்கள்: சுசுகியின் இ விட்டாரா வடிவமைப்பை பொருத்தவரையில், உயர்ந்த ரக தொழில்நுட்பம் ஆனது, பேட்டரி எலக்ட்ரிக் வாகனத்தின் மேம்பட்ட உணர்வையும், SUVயின் வலுவான தன்மையையும் வழங்குகிறது.
பவர்டிரெய்ன்: பேட்டரி எலக்ட்ரிக் வாகனத்தின் பவர்டிரெய்னில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரிகளுடன், மோட்டார் மற்றும் இன்வெர்ட்டரை ஒருங்கிணைக்கும் eAxle-களை கொண்டுள்ளது.
4WD சிஸ்டம்: ALLGRIP-e என்பது ஒரு எலக்ட்ரிக் 4WD ஆகும். இது 4 வீல் டிரைவ் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 வீல் டிரைவ் முன் மற்றும் பின்பகுதியில் இரண்டு தனித்தனி eAxles ஐக் கொண்டுள்ளது.HEARTECT-e குறிப்பாக எலக்ட்ரிக் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இது குறைந்த எடை கொண்ட அமைப்பு, உயர் ரக மின்னழுத்த பாதுகாப்பு மற்றும் குறுகிய ஓவர்ஹாங் காரணமாக விசாலமான உட்புறத்தைக் கொண்டுள்ளது. அதேபோல், பேட்டரி திறனை அதிகரிக்க திறனையும் கொண்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications