இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி, இன்று இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் தனது Invicto கார்-ஐ அறிமுகம் செய்கிறது. மாருதி சுசூகி நிறுவனம் எம்பிவி (MPV) பிரிவில் பல கார்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தாலும், Invicto மிகவும் ஸ்பெஷல், இதற்கு முக்கிய காரணம் டோயோட்டா.
மாருதி சுசூகி மற்றும் டோயோட்டா கூட்டணியில் பல தொழில்நுட்பம் மற்றும் மாடல்களை பரிமாறிக்கொண்டு இருக்கும் வேளையில், Toyota Innova Hycross மாடல் காரை ரீமாடலிங் செய்து Invicto என்ற பெயரில் அறிகமும் செய்கிறது. 3 வரிசை கொண்ட பெரிய கார் என்பதாலும், மாருதி சுசூகி-யின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பதாலும் அதிக எதிர்பார்ப்பு எம்பிவி (MPV) கார்களை வாங்குவோர் மத்தியில் உள்ளது.

பொதுவாக இந்திய கார் பிரியர்கள் புது கார்களை வாங்கும் போது அதில் உள்ள பியூச்சர்களை பார்ப்பதை காட்டிலும் அதிகம் கவனம் செலுத்துவது மைலேஜ் தான். பெரிய எம்பிவி (MPV) கார்களை வாங்கும் போது மைலேஜ்-ஐ கருத்தில் கொள்ள முடியாது என்றாலும் இந்த Maruti Suzuki Invicto கார் லிட்டருக்கு 23.24 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது.
மேலும் Toyota Innova Hycross மாடல் காரில் புல்டேங்க் கொண்டு 1097 கிலோமீட்டர் பயணிக்க முடியும் என கூறுகிறது, இதே அம்சம் தற்போது மாருதி சுசூகி Invicto காரில் வருகிறது என்பது கார் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. பெரிய சைஸ் கார் வாங்க முக்கியமான காரணம் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது தான், இதை பூர்த்தி செய்கிறது Invicto கார், இரு கார்களிலும் 52 லிட்டர் Fuel டேக் கொண்டு உள்ளது.
மாருதி சுசூகி Invicto காரின் முக்கிய அம்சம் பேனரோமிக் சன்ரூப், கேப்டன் சீட், மூட் லைட்டிங் என இன்றைய நவின கார்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும். Invicto கார் தற்போது டோயோட்டா இன்னோவா, மஹிந்திரா xuv700, கியா கார்னிவல் ஆகிய ப்ரீமியம் MPV கார்கள் உடன் போட்டிப்போட்டு வருகிறது.
மாருதி சுசூகி Invicto கார்-ஐ தற்போது நெக்ஸா ஷோரூம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெறும் 25000 ரூபாய் தொகை முன்பதிவில் புக் செய்ய முடியும். மேலும் இந்த கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கார் Zeta+ (7 சீட்டர்), Zeta+ (8 சீட்டர்) மற்றும் Aplha+ (7 சீட்டர்) ஆகிய 3 வேரியென்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த காரின் விலை 24.79 லட்சம் ரூபாய், 24.84 லட்சம் ரூபாய், 28.42 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசூகி-யின் NEXA பிரிவில் 8 வது மாடலாக மாருதி இன்விக்டோ கார் விற்பனைக்கு 4 நிறத்தில் வருகிறது. 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரில் ஹைப்ரிட் மோட்டார் உடன் வருவாதால் கூடுதல் மைலேஜ் கிடைக்கும்.
மாருதி இன்விக்டோ காரின் மிட் வேரியன்ட் Zeta+ (8 சீட்டர்) மாடல் வாங்கினால் மாத ஈஎம்ஐ மட்டும் 61,860 ரூபாயாகும்.
மாருதி சுசூகி Invicto கார் தற்போது டோயோட்டாவின் பெங்களூருக்கு அருகில் இருக்கும் பிடாடி தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது, தற்போது அங்கு கிரான்ட் விட்டாரா கார்களை தயாரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் Toyota Innova Hycross-ன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களின் அறிமுகத்திற்கு தற்போது கொடுக்கப்பட்டு உள்ள 2 வருட காலம் மேலும் நீட்டிக்கப்படலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications