இது மாருதி தர்பார்.. ஜனவரியில் சாதனை..!

கடந்த ஒரு வருட காலமாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தைகளின் நிலை அத்தனை நன்றாக இல்லை. எங்கு திரும்பினாலும் விற்பனை சரிவு என்கிற ஒரு சொல், ஒட்டு மொத்த துறையையும் ஆட்டம் காண வைத்துக் கொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட எல்லாம் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது.

அதோடு பாரத் ஸ்டேஜ் 6 புதிய எமிஷன் விதிகள் வேறு, வரும் ஏப்ரல் 01, 2020 முதல் நடைமுறைக்கு வருவதால், இந்த சிக்கலையும் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

இந்த சிக்கலான சூழலிலும் மாருதி சுசூகி சத்தம் காட்டாமல் ஒரு சாதனையைப் படைத்து இருக்கிறது. பயணிகள் வாகன விற்பனையில் கடந்த ஜனவரி 2020-ல் மொத்த சந்தையில் 53.3 சதவிகிதத்தைப் பிடித்து இருக்கிறது. இது 2019 - 20 நிதி ஆண்டின் எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சப்ளை

சப்ளை

கடந்த ஜனவரி 2020-ல் மாருதி சுசூகி நிறுவனம் 1,39,844 வாகனங்களை சப்ளை செய்து இருக்கிறார்களாம். ஜனவரி 2020-ல் விற்பனையான எல்லா நிறுவனங்களின் வாகனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தம் 2,62,596 வாகனங்களை விற்று இருக்கிறார்களாம். இது கடந்த ஜனவரி 2019 விற்பனையை விட 6% குறைவாம்.

காலாண்டு

காலாண்டு

கடந்த அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2019 வரையான 3 மாத காலத்தில் மொத்த வாகன சப்ளையில் 51.9 சதவிகிதம் செய்து இருக்கிறார்களாம். இந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் அரையாண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தம் 49.8 சதவிகித விற்பனையைத் தான் மாருதி சுசூகி செய்து இருக்கிறதாம்.

பி எஸ் 6 நிறுத்தம்

பி எஸ் 6 நிறுத்தம்

ஏற்கனவே பி எஸ் 4 ரக வாகனங்கள் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுத்திவிட்டார்களாம். அதோடு 12 மாடல் கார்களுக்கான பி எஸ் 6 ரக வாகனங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம். அதோடு தங்கள் வாகனங்களுக்கான கடன் வசதிகளுக்கு சில வங்கிகளுடன் பேசி இருக்கிறார்களாம். எனவே மாருதி சுசூகியின் வியாபாரம் தட்டித் தூக்கிக் கொண்டு இருக்கிறது போல.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+