இந்தியாவில் வாகன சேவை துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் மாருதி சுசூகி நிறுவனம் தனது Quickstop என்ற புதிய சேவை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Quickstop என்பது சிறிய அளவிலான சர்வீஸ் சென்டர், வேகமாக நகரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் விரைவான சேவையை வழங்குவதே இந்த புதிய சேவை முறையின் முக்கிய நோக்கமாகும்.

'Quickstop' என்பது குறைந்த இடத்தில் அமைக்கக்கூடிய சிறிய சர்வீஸ் சென்டர்களாகும். பழைய கண்டெய்னர்களை மறு வடிவமைப்பு செய்யப்பட்டு உருவாக்கப்படும் இந்த சர்வீஸ் சென்டர்கள், வாகனங்களின் வழக்கமான சர்வீஸ் மற்றும் சிறிய பழுதுபார்க்கும் பணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை கருவிகளையும் கொண்டிருக்கும்.
இந்த சர்வீஸ் சென்டர்கள் விரைவாக அமைக்கப்படக் கூடியவை என்பதால், வழக்கமான பெரிய சர்வீஸ் சென்டர்களை அமைக்க தேவைப்படும் நேரமும் முதலீடும் குறைகிறது. இதனால் அதிக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த நேரத்தில் சேவையை வழங்க முடியும்.
Quickstop சேவை மையங்கள் அதிக வாகன நெரிசல் உள்ள இடங்களில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. அதாவது அதிகப்படியான மாருதி சுசூகி வாகனங்களை விற்பனையாகும் பின்கோடுகளை தேர்வு செய்து அமைக்கப்படும். மேலும் இந்த குவிக்ஸ்டார் சர்வீஸ் சென்டர்கள் கார்ப்பரேட் அலுவலகங்கள், விமான நிலையங்கள் மற்றும் வணிக வாகனங்கள் அதிகமாக இயங்கும் இடங்களில் நிறுவப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலேயே சேவையை பெறும் வசதி கிடைக்கிறது.
இந்த புதிய முயற்சி குறித்து நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Hisashi Takeuchi கூறுகையில், மக்களின் வேலைப்பளு அதிகரித்து வரும் சூழலில், பர்சன்ல் வேலைகளை செய்வதற்கான நேரம் குறைந்து வருவதால், வாகன சேவையை எளிதாக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் Quickstop வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இத்தகைய சேவை தளம் மூலம் அலுவலகத்திற்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை அங்குள்ள Quickstop மையத்தில் ஒப்படைத்து, வேலை முடிந்த பின் முழுமையாக சர்வீஸ் செய்யப்பட்ட நிலையில் திரும்பப் பெற முடியும்.
இந்த சேவை தனிநபர் கார் உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், வணிக வாகனங்களை இயக்கும் நிறுவனங்களுக்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக fleet operatorsக்கு அதாவது டாக்சி சேவை செய்பவர்களுக்கும், வாகனங்களை வேகமாக சர்வீச் செய்யப்பட்டு இயக்க முடியும்.
மொத்தத்தில், 'Quickstop' சேவை மூலம் மாருதி சுசூகி நிறுவனம் தனது சர்வீஸ் நெட்வொர்க்-ஐ விரிவுபடுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய அனுபவத்தையும் வழங்குகிறது. குறைந்த இடம், குறைந்த நேரம், அதிக வசதி என்ற மூன்று அம்சங்களின் இணைப்பாக இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இது இந்திய வாகன சேவை துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications