இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனை சிறப்பாக இருந்தாலும், அதன் விற்பனை வளர்ச்சியில் மந்தநிலை உருவாகியுள்ளது. ஆனாலும் அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தற்போதைய எலக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் தான் கில்லி, ஆனால் ஒட்டுமொத்த கார் விற்பனையில் பல தசாப்தங்களாக மாருதி சுசூகி தான் கில்லி. இந்த நிலையில் மாருதி சுசூகி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யாத நிலையில் டாடா மோட்டார்ஸ் தனது ஆதிக்கத்தைக் கொண்டாடி வருகிறது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் மின்சார காரான eVX-ஐ 2025 ஆம் ஆண்டில் NEXA ஷோரூம்கள் வழியாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. NEXA என்பது நிறுவனத்தின் பிரீமியம் கார் விற்பனை சேவை தளமாகும்.
இந்த மாருதி eVX கார் 60kWh பேட்டரி பேக் கொண்டிருக்கும் எனவும், ஒரு முழு சார்ஜில் 550 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த மின்சார காரை வடிவமைத்துள்ளது.
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த மின்சார காரை ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் இதன் தரம் மற்றும் செயல்பாடுகள் பிற இந்திய கார்களை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில், SUV அல்லாத கார் பிரிவில் 65% சந்தை பங்கை கொண்டு முதலிடத்தில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம், SUV கார் பிரிவிலும் தனது செல்வாக்கை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த பிரிவில் தனது சந்தை பங்கை 50% ஆக உயர்த்துவதே இதன் இலக்கு, தற்போது வெறும் 22 சதவீதம் மட்டுமே.
ஜிம்னி, ஃப்ரொன்ஸ், பிரெZZA, கிராண்ட் விட்ராரா போன்ற புதிய மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியதன் மூலம் SUV கார் பிரிவில் தனது சந்தை பங்கை 10.5 சதவீதத்தில் இருந்து 22% ஆக உயர்த்தியுள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.
SUV கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், மற்ற கார் பிரிவுகளிலும் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவும் மாருதி சுசூகி நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதனால் ஹேட்ச்பேக், செடான் கார்களின் மறுவடிவத்தையும் அறிமுகம் செய்ய உள்ளது.
மாருதி சுசூகி eVX கார் பட்ஜெட் விலை, சிறப்பாக செயல்பாடும் பட்சத்தில் மக்களை எளிதாக கவர்ந்துவிடும். இது கட்டாயம் டாடா மோட்டார்ஸ் ஆதிக்கத்தைப் பாதிக்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை, இதேவேளையில் இந்த தடுமாற்றத்தில் இருந்து தப்பிக்க டாடா மோட்டார்ஸ் ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் கார்களை தயாரிக்கும் போட்டி பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளது.
மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தால், அதைவிடக் குறைவான விலையில், குறைவான எரிபொருள் செலவு கொண்ட ஹைட்ரஜன் எரிவாயு காரை அறிமுகம் செய்யும். ஆனால் ஆட்டோமொபைல் சந்தையில் தனது எலக்ட்ரிக் கார் மூலம் டாடா மோட்டார்ஸ் கைப்பற்றியுள்ள ஆதிக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்ற முடியுமா என்பது பெரும் கேள்வி தான்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications